ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Flipkart-ன் பிக் பில்லியன் டே விற்பனையில் தந்தைக்காக லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - யார் மீது தவறு.?

Flipkart-ன் பிக் பில்லியன் டே விற்பனையில் தந்தைக்காக லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - யார் மீது தவறு.?

ஃபிளிப்காரட்

ஃபிளிப்காரட்

Flipkart | பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனையில் ஆர்டர் செய்த IIM-அகமதாபாத் பட்டதாரியான யாஷஸ்வி ஷர்மாவுக்கு கசப்பான அனுபவத்தை தந்துள்ளது. தனது கசப்பான அனுபவம் பற்றி சோஷியல் மீடியாக்களில் ஃபோட்டோவுடன் ஷேர் செய்து இருக்கிறார் யாஷஸ்வி ஷர்மா.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டில் பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்னணி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் அனைத்திலும் அதிரடி ஆஃபர் சேல் நடைபெற்று வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என பலவற்றுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  வருடத்திற்கு ஒருமுறை ஆன்லைனில் நடைபெறும் மிகப்பெரிய விற்பனை திருவிழா என்பதால் யூஸர்கள் போட்டி போட்டு கொண்டு பொருட்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் விற்பனை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நடைபெற்று வருகிறது.

  இந்த பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனையில் கோடிக்கணக்கான யூஸர்களை போலவே மிகவும் ஆவலாக காஸ்டலியான பொருள் ஒன்றை ஃபிளிப்காரட்டில் ஆர்டர் செய்தார் IIM-அகமதாபாத் பட்டதாரியான யாஷஸ்வி ஷர்மா (Yashaswi Sharma). ஆனால் இவரது சமீபத்திய ஃபிளிப்காரட் ஆர்டர் இவருக்கு கசப்பான அனுபவத்தை தந்துள்ளது. தனது கசப்பான அனுபவம் பற்றி சோஷியல் மீடியாக்களில் ஃபோட்டோவுடன் ஷேர் செய்து இருக்கிறார் யாஷஸ்வி ஷர்மா.

  இது பற்றி அவர் கூறி இருப்பதாவது " ஃபிளிப்காரட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல்-இல் எனது தந்தைக்கு லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தேன். ஆனால் லேப்டாப்-பிற்கு பதிலாக என் தந்தைக்கு வந்ததோ டிடெர்ஜென்ட் சோப்கள். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் இருந்த போதிலும் ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்காரட் தனது தவறை சரிசெய்ய மறுத்துவிட்டது" என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பான போஸ்ட்டில் மேலும் தகவல் தெரிவித்துள்ள யஷஸ்வி ஷர்மா, லேப்டாப்பிற்கு பதில் டிடெர்ஜென்ட் சோப்கள் டெலிவரி வந்துள்ளதாக Flipkart-ன் கஸ்டமர் சப்போர்ட்டில் முறையிட்டேன்.

  Also Read : ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு பொம்மை கார் அனுப்பி அதிர்ச்சி அளித்த பிளிப்கார்ட்.!

  அவர்கள் அதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. நான் சொல்வது உண்மை தான் என்பதை நிரூபிக்க என்னிடம் சிசிடிவி ஆதாரம் உள்ளது என்று கூறிய போதும் கூட அவர்கள் அதை ஏற்கவில்லை என்று குமுறி உள்ளார். இந்த விஷயத்தில் பேக்கேஜை ஏற்று கொள்ளும் போது எனது தந்தை செய்த ஒரு தவறு ஓபன்-பாக்ஸ் டெலிவரி கான்செப்ட் பற்றி அவருக்குத் தெரியாமல் இருந்தது தான் என்றும் யாஷஸ்வி கூறி இருக்கிறார்.

  open-box delivery என்பது என்னவென்றால் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குபவர் அதை கொண்டு வரும் டெலிவரி ஏஜெண்டுக்கு முன்பாகவே வந்துள்ள பேக்கேஜைத் திறந்து, சரியான பொருள் தான் வந்திருக்கிறதா மற்றும் சேதமாகாமல் வந்திருக்கிறதா என பரிசோதித்த பின்னரே குறிப்பிட்ட ஏஜெண்டிடம் OTP-யை ஷேர் செய்ய வேண்டும்.

  Also Read : முன்னணி நிறுவன சிஇஓ-க்களை பின்னுக்குத் தள்ளிய டிக்-டாக் பிரபலம்.! ஆண்டு வருமானம் என்ன தெரியுமா.?

  இதனிடயே யாஷஸ்வியின் தந்தையோ குறிப்பிட்ட பேக்கேஜைப் பெற்றவுடன் OTP-ஐ டெலிவரி ஏஜெண்டிடம் ஷேர் செய்ய வேண்டும் என கருதி OTP-ஐ கொடுத்துவிட்டார் என்பது சோஷியல் மீடியாவில் யாஷஸ்வியின் போஸ்ட் மூலம் தெரிகிறது. டெலிவரி ஏஜெண்ட் குறிப்பிட்ட பாக்ஸை ஆய்வு செய்யாமல் வந்து சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் சென்று பிறகு அன்பாக்சிங் செய்ததில் லேப்டாப் உள்ளே இல்லை என்பதும் தெரிய வந்தது, என்று தனது போஸ்ட்டில் கூறி உள்ளார்.

  Flipkart கஸ்டமர் சப்போர்ட்டிடம் இது குறித்து பேசி பலனில்லை. நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கடைசி முயற்சியாக சோஷியல் மீடியாவில் இந்த போஸ்ட்டை ஷேர் செய்துள்ளதாகவும் யாஷஸ்வி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அந்த போஸ்ட்டில் Flipkart CEO கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

  Published by:Selvi M
  First published:

  Tags: Big Billion day sale, Flipkart, Trending