சரியான கிரவுண்ட் கூட இல்லாத நிலையில் சிறந்த வீராங்கனைகளை உருவாக்கிய கேரள பெண் உடற்கல்வி பேராசிரியை!

சிறந்த வீராங்கனைகளை உருவாக்கிய கேரள பெண் உடற்கல்வி பேராசிரியை

விமலா கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அன்னி வர்கீஸ் கேரளாவின் 19 பெண்கள் ஒலிம்பியன்களில் ஐந்து பேருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

  • Share this:
கேரளாவின் திருச்சூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 5 தடகள பெண் விளையாட்டு வீரர்களை உருவாக்கி தனி கவனம் பெற்றுள்ளது. இந்த கல்லூரி மற்றும் ஒலிம்பிக் வரை சென்று சாதித்த பெண் விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு பின்னால் சிறந்த திறமை கொண்ட ஒரு பெண் உடற்கல்வி ஆசிரியை இருக்கிறார். இது பற்றி விரிவாக பார்க்கலாம். விமலா கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அன்னி வர்கீஸ் கேரளாவின் 19 பெண்கள் ஒலிம்பியன்களில் ஐந்து பேருக்கு பயிற்சி அளித்துள்ளார். திருச்சூரில் விமலா கல்லூரி (Vimala College Autonomous Thrissur) இருக்கிறது.

இந்த கல்லூரியில் பிடி மாஸ்டராக பணியாற்றிய பேராசிரியர் அன்னி வர்கீஸ் (Annie Varghese), கேரளாவின் 19 பெண் ஒலிம்பியன்களில், 5 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார். கடந்த 2004 மற்றும் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற பெண் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், விமலா கல்லூரியில் இருந்து சென்று 1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற ரோசா குட்டி, 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பெண்கள் 4 × 400 மீ ரிலே (4×400 m relay) அணியில் இருந்த ஜின்சி பிலிப் மற்றும் மஞ்சிமா குரியகோஸ் மற்றும் 2004-ம் ஆண்டில் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற உயரம் தாண்டும் வீராங்கனை பாபி அலோசியஸ் ஆகியோர் இதில் அடக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சூருக்கு பக்கத்தில் உள்ள மாவட்டமான பாலக்காட்டில் அமைந்திருக்கும் மெர்சி கல்லூரி பிரபல வீராங்கனை பிடி உஷா, எம்டி வல்சம்மா, மெர்சி குட்டன் மற்றும் கே சாரம்மா என இதுவரை 4 ஒலிம்பியன்களை உருவாக்கியுள்ளது. தற்போது 77 வயதான பேராசிரியை அன்னி வர்கீஸ் 1967-ல் விமலா கல்லூரியில் உடற்கல்வியை ஆசிரியையாக பணியில் சேர்ந்து சுமார் 31 வருடங்கள் பணியில் இருந்துள்ளார். கடந்த 1998-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே கல்லூரி நிறுவனத்திற்கு சொந்தமாக ஒரு சரியான கிரவுண்ட் கூட இல்லாத சுழலில் தான் பயிற்சியாளராக இருந்தது பற்றிய சில அனுபவங்களை தற்போது அன்னி வர்கீஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எங்கள் கல்லூரியில் டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளுக்கான கிரவுண்டுகள் இருந்தன, ஆனால் தடகள விளையாட்டு வீரர்களுக்கென பிரத்தியேகமாக எந்த கிரவுண்டும் இல்லை. எனினும் இந்த விஷயம் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை தடுக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் பயிற்சிக்காக அதிகாலையிலேயே எண்கள் கல்லூரிக்கு அருகில் இருந்த பொறியியல் கல்லூரி ஒன்றின் கிரவுண்டிற்கு சென்றுவிடுவோம். அப்போது பிரின்சிபலாக பணியில் இருந்த இருவர் மற்றும் கன்னியாஸ்திரிகள் எங்களது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தனர். என்னுடன் பணியில் இருந்த 2 கோச்களான ஜார்ஜ் மற்றும் வூசப் ஆகியோர் தடகள வீரர்களுக்கு அறிவியல் ரீதியாக சில நுணுக்கங்களை கற்பித்தனர். மேலும் அவர்களின் நடத்தை மற்றும் அணுகுமுறையில் தேவைப்பட்ட திருத்தங்களை செய்தனர் என்று அன்னி வர்கீஸ் நினைவு கூர்ந்துள்ளார்.

Also read... ‘கோல்டன் பாய்’ நீரஜ் சோப்ராவுக்கு ஸ்பெஷல் டூடுல் வெளியிட்ட அமுல் நிறுவனம்!

தான் பெற்ற பயிற்சி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட அஞ்சு பாபி ஜார்ஜ், அன்னி வர்கீஸ் மிஸ் மற்றும் கோச்களான ஜார்ஜ் மற்றும் வூசப் ஆகியோர் எங்கள் மீது முழு கவனம் செலுத்தினர். நான் டிகிரியை தொடர்ந்த போது வூசப் சார் லாங் ஜம்ப் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும்படி ஊக்கப்படுத்தினார். கல்லூரி ஊழியர்கள் உட்பட நிர்வாகமும் எனக்கு எல்லா வகையிலும் உதவியது. எனது எல்லா சாதனைகளும் சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் பேராசிரியர் அன்னி வர்கீஸின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது என்று அஞ்சு குறிப்பிட்டுள்ளார்.

வீராங்கனை ஜின்சி பிலிப் தனது அனுபவம் பற்றி குறிப்பிடுகையில், அன்னி மிஸ் மற்றும் வூசப் சார் இருவருமே மிகவும் அன்பான நபர்கள். எனக்கென்று சொந்தமாக விளையாட்டு உபகரணங்கள் எதுவுமே இல்லாமல் தவித்த போது அன்னி மிஸ் எனக்கு ஒரு ஜோடி ஸ்பைக்ஸ் கொடுத்து உதவியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது என்று கூறினார். அன்னி வர்கீஸ் விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படைகளை கற்று கொடுத்தது மட்டுமின்றி அவர்களை மனரீதியாகவும், நிதி ரீதியாகவும் ஆதரித்ததாக பயிற்சியாளர் வூசப் கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: