ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாதத்துக்கு ரூ.5தான்.. சுதந்திரத்துக்கு முந்தைய கரண்ட் பில் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்

மாதத்துக்கு ரூ.5தான்.. சுதந்திரத்துக்கு முந்தைய கரண்ட் பில் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்

1940ஆம் ஆண்டு மின்சார பில்

1940ஆம் ஆண்டு மின்சார பில்

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் மின் விநியோகத்தை தனியார் நிறுவனங்கள் தான் மேற்கொண்டு வந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்ற வடிவேலுவின் சினிமா வசனத்திற்கு ஏற்ப மனிதர்களுக்கு கடந்த கால நினைவுகள் பொக்கிஷங்களாக பதிந்துவிடுகின்றன. அந்த பொக்கிஷங்களை அவ்வப்போது மீண்டும் திறந்து பார்த்து, முன்பு இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோமா என்ற ஆச்சரியப்படுவோம் அல்லவா. அப்படித்தான், சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்த பழையப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் 1940ஆம் ஆண்டைச் சேர்ந்த மின்சார கட்டண பில்லாகும். இதை Mumbai Heritage என்ற ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் மின் விநியோகத்தை தனியார் நிறுவனங்கள் தான் மேற்கொண்டு வந்துள்ளன. மகாராஷ்டிராவின் அன்றைய பம்பாய் நகருக்கு பம்பாய் எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிராம்வே கோ லிமிடெட் என்ற நிறுவனம் மின்சாரம் விநியோகித்துள்ளது. அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரு மாத மின் கட்டணத்தை 1940ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அன்று ரசீதாக அனுப்பியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு அந்த வாடிக்கையாளர் செலுத்திய மின்கட்டணம் எவ்வளவு தெரியுமா. வெறும் ஐந்து ரூபாய் 20 காசுகள் மட்டுமே. இந்த ரசீதில் கட்டண விவரங்களை அச்சடிக்காமல் கையால் எழுதியுள்ளனர். இந்த ஐந்து ரூபாய் கரண்ட் பில் தற்போது இணைய வாசிகளிடையே வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் சாதாரண குடும்பத்திற்கே சராசரியாக 500 ரூபாய், 1000 ரூபாய் என மின்சார கட்டண் வரும் நிலையில், அந்த காலத்தில் இருந்த விலை வாசியையும் தற்போதையை விலைவாசியையும் ஒப்பிட்டு பார்த்து இணைய வாசிகள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அப்போதெல்லாம் ஒரு மாத பில்லே ரூ.5 மட்டுமே இருந்துள்ளது. ஆனால், இப்போது, ஒரு யூனிட் கட்டணமே ரூ.5 வரை உயர்ந்துள்ளது என எளிய நடுத்தர மக்கள் தங்கள் மனக்குறைய கமெண்டுகளாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.

First published:

Tags: EB Bill, Electricity bill, Viral