• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மனிதர்களை போல பல்வரிசை..செம்மறியாட்டு தலை கொண்ட விசித்திரமான மீன் - வைரல் புகைப்படம்

மனிதர்களை போல பல்வரிசை..செம்மறியாட்டு தலை கொண்ட விசித்திரமான மீன் - வைரல் புகைப்படம்

விசித்திரமான மீன்

விசித்திரமான மீன்

மனிதர்களை போல பல்வரிசையை கொண்டுள்ள விசித்திரமான மீனின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாக்கள் நம்மை சுற்றி உள்ள சில அசாதாரண மற்றும் சுவாரஸ்ய விஷயங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது. பலப்பல புதிய விஷயங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஜென்னட்ஸ் பியர் என்ற மீன்பிடித் தளத்தில் மீனவரின் வலையில் பிடிபட்ட வித்தியாசமான மீன் ஆகும். அந்த மீன் முதலில் பிடிப்பட்ட போது ஒரு வழக்கமான மீன் தான் பிடிபட்டுள்ளது என்று நினைத்தவர்களுக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. ஆனால் பிடிபட்ட மீனினுடைய வாயின் வித்தியாசமான அம்சங்களைக் கண்டு மக்கள் மிகவும் வியப்படைந்துள்ளனர்.

ஏனென்றால் வட கரோலினாவில் பிடிபட்ட அந்த மீன், மனிதர்களைப் போல தனித்துவமான பற்களையும், செம்மறியாட்டைப் போன்ற தலையையும் கொண்டு காணப்பட்டுள்ளது. செம்மறியாட்டு தலை மற்றும் மனிதர்களை போன்ற பற்களை கொண்ட மீனின் அசாதாரண கலவை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. என்றாலும் இந்த விசித்திர மீனை பிடித்த நாதன் மார்ட்டின், இந்த வகை கடல் உயிரினத்தை தான் நீண்ட காலமாக தேடி கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வட கரோலினாவின் மீன்பிடித்தலத்தில் வழக்கமாக மீன் பிடிக்கும் நாதன் மார்ட்டின், வாயில் பற்கள் நிறைந்த மீனின் முகத்தை நேரடியாக பார்த்த போது தனது பல நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

Also Read : ’கொள்ளுப்பாட்டியின் அடடே அழகு’ - 99 வயதில் மாடலிங்கில் அசத்திய பாட்டி

ஷீப்ஸ்ஹெட் என்றழைக்கப்படும் இந்த வகை மீனின் மண்டையானது செம்மறியாட்டு தலையுடன் ஒத்திருப்பதால் இந்த பெயரைப் பெற்றது. இதனிடையே நாதன் மார்ட்டினால் பிடிக்கப்பட்ட இந்த வித்தியாசமான நீர்வாழ் விலங்கின் ஃபோட்டோவை, Jennett’s Pier மீன்பிடி தலம் தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியா பேஜ்களில் ஷேர் செய்து உள்ளது. சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஷீப்ஸ்ஹெட்டின் ஃபோட்டோ வைரலாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அந்த மீனின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் மனிதர்களுக்கு இருப்பதை போன்றே உணவுகளை கடித்து சாப்பிடபயன்படுத்தப்படும் முன்வாய் பற்கள் இருப்பதை ஷேர் செய்யப்பட்டுள்ள ஃபோட்டோ காட்டுகிறது. அதன் இரையை நசுக்கி சாப்பிட ஏதுவாக அந்த மீனின் வாயில் பல வரிசை கடவாய் பற்களும் உள்ளன.



இந்த வித்தியாசமான தோற்றமுள்ள மீனைப் பிடித்த நாதன் மார்ட்டின் கையில் அந்த மீனுடன் நிற்கும் ஃபோட்டோவும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. விசித்திர மீனின் தோற்றது முதல் முறையாக பார்த்த ஆன்லைன் யூஸர்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட அதே நேரத்தில் பல யூஸர்கள் இது ஃபோட்டோஷாப் வொர்க்காக இருக்கும் என்று நினைத்தனர். பின்னர் அவர்கள் ஷீப்ஸ்ஹெட் உயிரினம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு ஆம் இது நிஜத்தில் வாழும் ஒரு கடல் மீன் தான் என்று கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

ஒரு யூஸர் தனது பற்களை விட ஃபோட்டோவில் இருக்கும் மீனின் பற்கள் அழகாக இருப்பதாக கூறியுள்ளார். மற்றொரு யூஸர் வாழ்நாளில் இது போன்ற ஒரு மீனை தான் பார்த்ததில்லை என்றார். இது நிஜமான ஒரு மீன்வகை என்பதை அறியாத ஒரு யூஸர் "இது போன்றதொருமோசமான ஒரு ஃபோட்டோஷாப்பை பார்த்ததில்லை என்று கூறி இருக்கிறார். எனினும் இந்த போஸ்டை ஏராளமானோர் ஷேர் மற்றும் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: