மனித முகச்சாயலில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்..

மனிதர்களுக்கு இருப்பது போன்று உதடுகள், பல் உடன் கூடிய அரிய வகை மீன் ஒன்று பிடிப்பட்டுள்ளது.

மனித முகச்சாயலில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்..
  • Share this:
இயற்கையின் பேரழகையும், அதிசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இயற்கையின் படைப்பில் சில வினோதமான ஆச்சரியங்கள் காலப்போக்கில் கண்டறியப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக மனித முகச்சாயலில் மீன் ஒன்று மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது.

மனித முகச்சாயலில் இருக்கும் இந்த மீன் வடிவமைப்பு மனிதர்களை போன்று உதடுகள், பற்களை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மிகவும் அரியவகையான வினோதமான இந்த மீன் பல ஆச்சரியங்களை தன்வசம் கொண்டுள்ளது. சுமார் 14 ஆயிரம் லைக்ஸ்களை ட்விட்டரில் இந்த புகைப்படம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை நம்ப முடியாத சிலர் இது மார்ஃபிங் என்று பதிவிட்டுள்ளனர். ஆனால் இது உண்மையாக பிடிப்பட்ட மீன். மலேசியாவில் பிடிப்பட்ட இந்த மீன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading