இன்றைக்கு இணையம் இல்லையென்றால் நாம் இல்லை என்ற அளவிற்கு அதன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இணையத்தின் ஆதிக்கத்தில் நாம் இருக்கும் சூழலில், சில சமயங்களில் இதில் வெளியாகும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நம் மனதை விட்டு எப்போதும் நீங்காது. இப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான்? அந்த வீடியோவில் இருந்தது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
உணவகத்தில் உயிருடன் பரிமாறப்பட்ட மீன்…
மட்டன், சிக்கனுக்கு அடுத்தப்படியாக அசைவ பிரியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு என்றால் அது மீனாக தான் இருக்கும். இப்படித்தான் ஜப்பானில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற மீன் பிரியர் ஒருவர் உணவகத்தில் மீன் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். இவரின் ஆர்டரின் பேரில் ஒரு தட்டில் காய்கறிகள், நூடுல்ஸ் மற்றும் இரண்டு மீன்களுடன் அவர் முன்னதாக வைத்துள்ளனர் ஊழியர்கள்.
Read More : சேற்றில் சிக்கிய யானைகள்..! தாயை எழுப்பிய குட்டி யானை..! வைரலாகும் வீடியோ..
Fish served at restaurant bites chopstick😳 pic.twitter.com/PnkG6xt1Ig
— OddIy Terrifying (@OTerrifying) February 13, 2023
மேலும் மற்றொரு பயனர், இந்த வீடியோ நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சமையல் தொழிலில் இருக்கிறேன் எனவும் இதற்கு முன் என்னுடைய வாழ்க்கையில் இதுப்போன்ற பொறுப்பற்ற தன்மையைப் பார்த்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், அனைவரிடமும், தயவு செய்து தங்களின் உணவு நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இதோடு மற்றொரு பயனர் ஒருவர், ஜப்பான் போன்ற நாடுகளில் இதுப்போன்ற விசித்திரமான உணவுகள் உண்பது சகஜம் தான் எனவும் ட்விட் செய்துள்ளார். இதே வீடியோ தான் சென்ற ஆண்டு இன்ஸ்டாவில் வெளியானபோது, நெட்டிசன்களிடம் பிரபலமான நிலையில், மீண்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fish, Trending Video, Viral