டிவி, ஏர்கூலர், சார்ஜிங் வசதி, வாஷ்பேசின்... மினி வீடாகவே மாறிய ஆட்டோ..!

அக்‌ஷய் குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணா இந்த ஆட்டோவின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதும் வைரலாகி வருகிறது.

டிவி, ஏர்கூலர், சார்ஜிங் வசதி, வாஷ்பேசின்... மினி வீடாகவே மாறிய ஆட்டோ..!
ஆட்டோ வீடு
  • News18
  • Last Updated: November 23, 2019, 2:10 PM IST
  • Share this:
டிவி, ஏர்கூலர், சார்ஜிங் வசதி, வாஷ்பேசின் என அத்தனை வசதிகளும் நிறைந்த ஆட்டோ ஒன்று மும்பை நகரில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

அதிநவீன வசதிகள் நிறைந்த இந்த ஆட்டோவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் சத்யவான் கீதே தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்க வேண்டும் என விரும்பி இதைச் செய்துள்ளார்.

இவரது ஆட்டோவில் கைகழுவ ஹேண்ட் வாஷ் உடனான வாஷ் பேசின், மொபைல் சார்ஜிங் வசதி, டெஸ்க்டாப் மானிட்டர், பசுமையான செடிகள் என ஒரு மினி வீடு போன்றே வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவில் பயணிக்கும் முதியவர்களுக்கு 1 கி.மீ இலவச பயணம் அளிக்கப்படுகிறது. இந்த ஆட்டோவில் பயணிக்க மும்பைவாசிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆட்டோவில் பயணித்தவர்கள் அளிக்கும் பாராட்டுகளால் சத்யாவானின் ஆட்டோவுக்கு கடுமையான டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணா இந்த ஆட்டோவின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதும் வைரலாகி வருகிறது.

மேலும் பார்க்க: கஞ்சா புகைக்க மாதம் ₹2 லட்சம் சம்பளம்
First published: November 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்