ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அடேங்கப்பா! ரூ.32 லட்சத்திற்கு ஏலம் போன பழைய ஐபோன் - அப்படி என்ன ஸ்பெஷல்?

அடேங்கப்பா! ரூ.32 லட்சத்திற்கு ஏலம் போன பழைய ஐபோன் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஐபோன்

ஐபோன்

ஆர்ஆர் நிறுவனம் ஆரம்பகட்ட ஏலமாக 2,500 அமெரிக்க டாலர்களை தான் அறிவித்துள்ளது.சில மணி நேரங்களிலேயே ஏலத்தின் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா முழுவதும் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ ஆகிய மாடல்கள் பற்றிய தகவல்கள் தீயாய் பரவி வந்த நிலையில், தற்போது முதன் முறையாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் ஒன்று பெரும் தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் முதன் தலைமுறை ஐபோனை அறிமுகப்பத்தினார். 3.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட 3ஜி சேவையை ஏற்கக்கூடிய முதல் தலைமுறை ஐபோன், முதலில் 4ஜிபி, 8ஜிபி வெரியண்ட்களில் மட்டுமே வெளியானது. பின்னர் வாடிக்கையாளர்களின் விருப்பம் காரணமாக 16 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் தலைமுறை ஐபோன் ஆனது, 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் சஃபாரி வெப் புரோவுசர் உடன் அறிமுகமானது. 4.8 இன்ச் அகலமும், 4.5 அங்குல உயரமும் கொண்ட ஐபோன், 133 கிராம் எடையுடன் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த முதல் தலைமுறை ஐபோன் வெளிவந்த புதிதில் 599 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

Read More : நடுவானில் குடிபோதை.. கேபின் உதவியாளரின் விரலைக் கடித்த பயணி... பாதி வழியில் தரை இறங்கிய விமானம்!

15 ஆண்டுகளாக அன்பாக்ஸ் செய்யப்படாமல் சீலுடன்புத்தம் புதிதாக வைக்கப்பட்டிருந்த முதல் தலைமுறை 8ஜிபி வேரியண்ட் ஐபோன் ஆனது $39,339.60 டாலருக்கு ஏலம் போயுள்ளது. அதாவது இதன் இந்திய ரூபாயின் படி அதன் தோராயமான மதிப்பு 32 லட்சத்து 37 ஆயிரத்து 153 ரூபாய் ஆகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ஆர் என்ற ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில், உலக தொழில்நுட்பத்தின் முக்கியமான சின்னமாக கருதப்படும் ஆப்பிள் ஐபோனின் முதல் தயாரிப்பு ஆச்சர்யத்தக்க வகையில் விற்பனையாகியுள்ளது. செப்டம்பர் 30 அன்று ஏலத்திற்காக ஆப்பிள் ஐபோன் பட்டியலிடப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏலம் நிறைவடைந்துள்ளது.

Read More : துபாய் வானில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்..!

சீல் பிரிக்கப்படாத புத்தம் புதிய முதல் தலைமுறை ஆப்பிள் ஐபோனுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கூடும் என ஏல நிறுவனம் கணக்கிட்டு வைத்துள்ளது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், முதல் முறை ஆப்பிள் ஐபோன் அதன் அசல் விலையை விட 65 மடங்கு அதிமான தொகைக்கு ஏலம் போயுள்ளது.

ஆர்ஆர் நிறுவனம் ஆரம்பகட்ட ஏலமாக 2,500 அமெரிக்க டாலர்களை தான் அறிவித்துள்ளது. ஆனால் சில மணி நேரங்களிலேயே ஏலத்தின் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது. இறுதியாக கடும் போட்டிக்கு இடையில் இதனை யாரோ நபர் $39,339.60 அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஏலம் வாங்கியுள்ளார்.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஐபோன் 14 ப்ரோ 256 ஜிபி வெரியண்ட்1,39,900 ரூபாய்க்கும், ஆப்பிள் ப்ரோ மேக்ஸ் 1 டிபி வெரியண்ட் 1,89,900 ரூபாய்க்கும் கிடைக்கூடிய நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை ஐபோன் 32 லட்சத்திற்கு மேல் விற்பனையாகியுள்ள சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Apple iphone, Trending, Viral