முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சிவன் கையில் மதுபானம்...சர்ச்சை ஸ்டிக்கரால் இன்ஸ்டாகிராம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

சிவன் கையில் மதுபானம்...சர்ச்சை ஸ்டிக்கரால் இன்ஸ்டாகிராம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

இன்ஸ்டாகிராம் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம் மீது வழக்கு

இந்துக்களின் கடவுளான சிவனை ஆட்சேபிக்கத்தக்க வகையில் ஸ்டிக்கரில் காட்டியதற்காக இன்ஸ்டாகிராமிற்கு எதிராக டெல்லியை சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லியை சேர்ந்த மணீஷ் சிங் என்பவர் இது தொடர்பாக அளித்துள்ள புகாரில் இந்து கடவுளான சிவன் ஒரு கையில் கிளாஸ் ஒன்றை வைத்திருப்பது போலவும், அந்த கிளாஸில் ஆல்கஹாலை ஒத்த (ஒயின்) இருப்பது போலவும், மற்றொரு கையில் மொபைல் ஃபோனை வைத்து கொண்டு கண் சிமிட்டுவது போன்ற ஸ்டிக்கர் ஒன்று இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களின் மனதை வேதனை மற்றும் புண்படுத்த கூடிய வகையில் இருந்த கடவுள் சிவபெருமானின் அந்த ஸ்டிக்கரை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தனது புகாரில் மணீஷ் சிங் கூறி உள்ளார். சிவபெருமானை கோடிக்கணக்கான இந்து மக்கள் பக்தியுடன் வழிபட்டு வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் அதிகாரிகள் இந்த கடுமையான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார்தாரர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென் ஆஃப்ரிக்க பெண் உலக சாதனை

யூஸர்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை அப்லோட் செய்யும் போது சர்ச் பாக்ஸில் சிவபெருமானின் ஸ்டிக்கரை தேடும் போது இந்த ஆட்சேபகரமான ஸ்டிக்கரை தோன்ற செய்துள்ளது இன்ஸ்டாகிராம். ஸ்டிக்கர் ஒரு கிராபிக்ஸ் இன்டர்சேஞ்ச் வடிவமைப்பில் (GIF) இருந்தது.

புகார்தாரரின் கூற்றுப்படி, இந்த ஸ்டிக்கர்கள் இன்ஸ்டாகிராமால் மட்டுமே யூஸர்களுக்கு வழங்கப்பட்டன என்றும், இதற்கும் எந்த ஒரு சோஷியல் மீடியா யூஸர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ :  மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு பணமோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

இதன் மூலம் இந்து சமூக மக்களின் மனதை புண்படுத்தும் ஒரே நோக்கத்துடன் சிவனின் GIF உருவாக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள மணீஷ் சிங், இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்காக இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி மற்ற அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு புகார் மனுவில் கோரி இருந்தார்.

இந்துக்களை ஆத்திரமூட்டும் ஒரே நோக்கத்துடன் ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இன்ஸ்டாவின் இந்த செயல் வெறுப்பு மற்றும் பகைமை ஆகியவற்றை ஊக்குவிப்பதாகவும் சாடியுள்ளார்.

ALSO READ : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த நபர்!

இந்துக்களின் மிகப்பெரிய கடவுளான சிவனை வேண்டுமென்றே ஆட்சேபனைக்குரிய வகையில் சித்தரித்து கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடிய இன்ஸ்டாகிராம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கேட்டு கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கிடைக்கக்கூடிய ஆட்சேபனைக்குரிய பல ஸ்டிக்கர்கள் குறித்து ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 மற்றும் 295 ஏ பிரிவுகளின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ மற்றும் பிற அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் புகார்தாரர் மணீஷ் சிங் கோரியுள்ளார்.

ALSO READ :  குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனம்.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,300 கட்டணம்

கடந்த பிப்ரவரியில் OTT தளங்கள் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள் (Intermediary Guidelines and Digital Media Ethics Code) மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மேலும் அதிகாரிகளால் ஆட்சேபம் தெரிவிக்கப்படும் எந்த உள்ளடக்கத்தையும் அடுத்த 36 மணி நேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் அகற்ற இந்த சட்டம் வழி செய்கிறது.

First published:

Tags: FIR, Instagram