மாஸ்க் அணிய வலியுறுத்திய பெண் மாநகராட்சி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: மும்பையில் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண்!

பெண் மாநகராட்சி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

முகக்கவசம் இல்லாமல் ஆட்டோவில் ஏறுவதை கண்ட பெண் மாநகராட்சி அதிகாரி ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளார். இதனால் ஆக்ரோஷமடைந்த அப்பெண்மணி திடீரென மாநகராட்சி பெண் ஊழியர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார்.

  • Share this:
மும்பையில் பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை தடுத்துநிறுத்திய மாநகராட்சி பெண் ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கிலான கடமையை செய்ததற்காக பெண் ஊழியர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000ஐ கடந்துள்ள நிலையில் அதன் தலைநகரான மும்பையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. கொரோனா 2ம் அலையை தடுக்க வேண்டும் என மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஆபத்பாந்தவனாக விளங்கும் முகக்கவசத்தை அணிவதை மக்கள் கட்டாயகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள மும்பையின் கந்திவல்லி சாலையில் முகக்கவசம் அணியாதவர்களை எச்சரித்து, அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் பெண்மணி ஒருவர் முகக்கவசம் இல்லாமல் ஆட்டோவில் ஏறுவதை கண்ட  மாநகராட்சி பெண் ஊழியர் அஸ்வினி சவான் (வயது 35) அவரை தடுத்து நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆக்ரோஷமடைந்த அப்பெண்மணி திடீரென மாநகராட்சி பெண் ஊழியர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார். 
View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


என்னை எப்படி தடுத்து நிறுத்த முடியும், நீ யார் என்னை தொடுவதற்கு என சத்தம் போட்ட பெண்மணி, மாநகராட்சி ஊழியரை காலால் எட்டி மிதித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும், கன்னத்தில் அறைந்தும் வன்முறையில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர், அதே நேரத்தில் தன்னை தாக்கிய அப்பெண்மணியை கெட்டியாக பிடித்துக் கொண்ட மாநகராட்சி பெண் ஊழியர் அஸ்வினி அவரை தொடர்ந்து மாஸ்க் அணியுமாறு கூறிக்கொண்டே இருந்தார். அருகில் இருந்தவர்களிடம் இந்த பெண்மணியை முகக்கவசம் இல்லாமல் செல்ல அனுமதிக்காதீர்கள் என்று மாநகராட்சி ஊழியர் கூறினார்.

இந்த மொத்த நிகழ்வையும் வீடியோவாக எடுத்த நபர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. கொரோனா உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் பொறுப்பில்லாமல் முகக்கவசம் இன்றி சென்றதை தட்டிக்கேட்ட மாநகாட்சி பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பொறுப்பற்ற செயல் மட்டுமின்றி கண்டிக்கத்தக்க ஒன்று என்று சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Published by:Arun
First published: