ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நீங்க எப்படிப்பட்ட நபர்? உங்க குணாதியசத்தை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட் இதுதான்!

நீங்க எப்படிப்பட்ட நபர்? உங்க குணாதியசத்தை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட் இதுதான்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒரு விஷயத்தை என்ன கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள்? குழுவாக உள்ள பொருட்களில் உங்கள் மனம் எதை நோட்டமிடுகிறது? பொதுவான கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? என்பதையெல்லாம் உளவியல் ரீதியாக ஆராய்ந்து, உங்கள் குணாதிசயம் எப்படி இருக்கும் என்று ஓரளவுக்கு கணித்து சொல்லிவிட முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக உன் நண்பன் யார் என்று சொல், நீ யாரென்று சொல்கிறேன் என்று குறிப்பிடுவார்கள். நம் நண்பனின் குண நலன்கள், பழக்க, வழக்கங்கள் நம்மிடமும் இருக்கும் என்பது இதன் அர்த்தம். ஆனால், இதை முழுமையாக உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் மதுப்பழக்கம் கொண்ட ஒருவரின் நண்பருக்கும் மதுப்பழக்கம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒருவர் கோபக்காரர் என்றால், அவருடைய நண்பரும் கோபக்காரராக இருக்க வேண்டும் என்றில்லை. எப்போதும் நண்பரை சாந்தப்படுத்தும் அமைதிப் புறாவாக கூட அவர் இருக்கலாம். ஆக, ஒரு மனிதனின் குணாதிசயத்தை வேறு எந்த வகையில் மதிப்பிடுவது?

ஒரு விஷயத்தை என்ன கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள்? குழுவாக உள்ள பொருட்களில் உங்கள் மனம் எதை நோட்டமிடுகிறது? பொதுவான கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? என்பதையெல்லாம் உளவியல் ரீதியாக ஆராய்ந்து, உங்கள் குணாதிசயம் எப்படி இருக்கும் என்று ஓரளவுக்கு கணித்து சொல்லிவிட முடியும்.

Read More : இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த செய்தியில் சில கேள்விகள் உள்ளன. விடைகளும் இங்கேயே தான் உள்ளன. நீங்கள் எந்த விடையை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து, மதிப்பெண்களை கணக்கிட்டு வாருங்கள். அதன் அடிப்படையில் நீங்கள் இறுக்க மனம் கொண்டவரா, வெளிப்படைத்தன்மை உடையவரா, உணர்ச்சிவசப்படும் நபரா, எதைப்பற்றியும் கவலை கொள்ளாத நபரா என்பதை கண்டறியலாம்.

உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் அதிகம் விரும்புவது எது?

நன்றாக சாப்பிட்டு, ஜம்மென்று தூங்குவது என்றால் 50 பாயிண்ட்ஸ். நெட்பிளிக்ஸ் சீரீஸ் அல்லது ஹிட் படம் பார்ப்பது என்றால் 10 பாயிண்ட்ஸ். வீட்டில் உள்ள எல்லோரையும் அசத்தும்படி சமைப்பது என்றால் 20 பாயிண்ட்ஸ். வெளியிடங்களுக்கு சென்று ஊர் சுற்றுவது என்றால் 30 பாயிண்ட்ஸ்.

எந்த விளையாட்டு உங்களுக்கு விருப்பமானது?

கிரிக்கெட் என்றால் 50 பாயிண்ட்ஸ். நீச்சல் போட்டி என்றால் 20 பாயிண்ட்ஸ். குதிரைப்போட்டி என்றால் 40 பாயிண்ட்ஸ். கால்பந்து போட்டி என்றால் 30 பாயிண்ட்ஸ். கார் ரேஸ் என்றால் 10 பாயிண்ட்ஸ். மேலே சொன்ன விடைக்கான பாயிண்ட்ஸ் உடன், இதனையும் சேர்த்து கணக்கிடவும்.

எந்த விலங்கு பிடிக்கும்?

கரடிக்கு 50 பாயிண்ட்ஸ், வரிக்குதிரைக்கு 10 பாயிண்ட்ஸ், முயலுக்கு 20 பாயிண்ட்ஸ், நாய்க்கு 30 பாயிண்ட்ஸ், ஒட்டகச்சிவிங்கிக்கு 40 பாயிண்ட்ஸ். நீங்கள் எந்த விலங்கை தேர்வு செய்தீர்களோ, அந்த பாயிண்ட்ஸ்-ஐ மேலுள்ள பாயிண்ட்ஸ்களுடன் கூட்டிக் கொள்ளவும்.

எந்த வீட்டில் வசிக்க விருப்பம்?

தனி வீடு என்றால் 30 பாயிண்ட்ஸ், அரண்மனை போன்ற பங்களா என்றால் 40 பாயிண்ட்ஸ், அடுக்குமாடி வீடு என்றால் 10 பாயிண்ட்ஸ், நீச்சல் குளத்துடன் கூடிய பண்ணை வீடு என்றால் 50 பாயிண்ட்ஸ், தோட்டத்து வீடு என்றால் 20 பாயிண்ட்ஸ் கணக்கிட்டு கொள்ளவும்.

எந்த மியூஸிக் அதிகம் பிடிக்கும்?

ராக் மியூஸிக் என்றால் 50 பாயிண்ட்ஸ், பாப் பாடல் என்றால் 10 பாயிண்ட்ஸ். கவுண்ட்ரி - 20 பாயிண்ட்ஸ், ஜாஸ் - 30 பாயிண்ட்ஸ், கிளாசிக்கல் - 40 பாயிண்ட்ஸ் என கணக்கிடவும்.

எந்த கலர் பிடிக்கும்

சிவப்பு நிறம் 40 பாயிண்ட்ஸ், மஞ்சள் நிறம் 20 பாயிண்ட்ஸ், ஊதா நிறம் 50 பாயிண்ட்ஸ், பச்சை 10 பாயிண்ட்ஸ், ஆரஞ்சு நிறம் 30 பாயிண்ட்ஸ் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

எந்த சுற்றுலா இடம் பிடித்தமானது

கடற்கரை என்றால் 30 பாயிண்ட்ஸ், மலைப்பிரதேசம் என்றால் 50 பாயிண்ட்ஸ், காடுகள் என்றால் 10 பாயிண்ட்ஸ், பாலைவனம் என்றால் 20 பாயிண்ட்ஸ், விலங்கு சரணாலயம் என்றால் 40 பாயிண்ட்ஸ் ஆகும்.

Read More : யாருக்கும் தெரியாமல் டெலிவரிக்கு செல்லும் சொமேட்டோ நிறுவனர்: ரகசியத்தை உடைத்த நாக்குரி நிறுவனர்!

எந்த காலநிலை அதிகம் பிடிக்கும்

வெயில் காலம் என்றால் 30 பாயிண்ட்ஸ், மழைக்காலம் என்றால் 50 பாயிண்ட்ஸ், பனிக்காலம் என்றால் 10 பாயிண்ட்ஸ், இடி, மின்னல் காலம் என்றால் 20 பாயிண்ட்ஸ், குளிர்காலம் என்றால் 40 பாயிண்ட்ஸ் கணக்கு செய்யவும்.

பிடித்தமான பூ

செவ்வந்தி பூ என்றால் 30 பாயிண்ட்ஸ், ரோஜா என்றால் 50 பாயிண்ட்ஸ், சாமந்தி பூ என்றால் 10 பாயிண்ட்ஸ், சூரியகாந்தி பூ என்றால் 20 பாயிண்ட்ஸ், அல்லி மலர் என்றால் 40 பாயிண்ட்ஸ் ஆகும்.

எங்கு சேவை செய்ய விரும்புவீர்கள்

கெமிஸ்ட்ரி லேபில் சேவை செய்வீர்கள் என்றால் 50 பாயிண்ட்ஸ் ஆகும். தானதர்மம் செய்ய 10 பாயிண்ட்ஸ், குழந்தையை தத்தெடுக்க 20 பாயிண்ட்ஸ், சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு காண 30 பாயிண்ட்ஸ், சொந்த நிறுவனம் தொடங்க 40 பாயிண்ட்ஸ் என கணக்கீடு செய்து கொள்ளவும்.

உங்கள் மதிப்பெண்களும், குணாதிசயமும்

உங்கள் பாயிண்ட்ஸ் 100 முதல் 170 வரையில் என்றால் நீங்கள் இறுக்கமான குணம் படைத்தவர். உங்கள் பாயிண்ட்ஸ் 180 முதல் 260 வரையில் என்றால் நீங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்த நபர். உங்கள் பாயிண்ட்ஸ் 270 முதல் 350 வரை என்றால் நீங்கள் உணர்ச்சிவசப்படும் நபர். உங்கள் பாயிண்ட்ஸ் 360 முதல் 440 வரை என்றால் நீங்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத நபர். இதையே உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து, அவர்களது குணாதிசயத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral