Home /News /trend /

உங்க கண் கூர்மைக்கான சவால்.. ஒளிந்துள்ள கம்பளிப்பூச்சியை 30 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்

உங்க கண் கூர்மைக்கான சவால்.. ஒளிந்துள்ள கம்பளிப்பூச்சியை 30 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்

Optical Illusion | இந்த அழகான பட்டாம்பூச்சிகள் உள்ள படத்தில், நீங்கள் எதிர்பாராத புதிர் ஒன்று காத்திருக்கிறது. இந்த படத்தில் ஒரு கம்பளிப்பூச்சி மறைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட கம்பளிப்பூச்சியை 30 வினாடிகளுக்குள் உங்களால் கண்டறி முடியுமா என்பதை பரிசோதித்து பாருங்கள்.

மேலும் படிக்கவும் ...
    நமது மூளையையும் கண்களையும் ஏமாற்றும் ஒளியியல் மாயைகள், காட்சி மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. இது படங்கள் வடிவிலும், வீடியோக்கள் வடிவிலும் இன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவற்றை பார்க்கும் எல்லோருக்கும் ஆரம்பத்தில் ஒரு புது வித குதூகலம் உண்டாகும். ஆனால், பிறகு தான் இதிலுள்ள மாயத்தை அவர்களால் உணர முடியும். மேலும் இந்த ஆப்டிகல் இலுஷன்கள் நம்மை பல நேரங்களில் ஏமாற்ற கூடிய வகையில் இருக்கும். இத்தகைய மாயைகள் உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக நாம் உணரும் எண்ணத்தை ஏற்படுத்தும்.

    பொதுவாக நாம் பார்க்கின்றவற்றை பற்றி நமது கண்கள் மூளைக்கு தகவல்களை அனுப்பும்போது ஒளியியல் மாயைகள் ஏற்படுகின்றன, மேலும் அது யதார்த்தத்துடன் பொருந்தாத ஒன்றை உணர வைக்க நம்மை தூண்டுகிறது. நாம் பார்ப்பதையே நம் கண்கள் மூளையிடம் நம்ப செய்கிறது. நாம் பார்ப்பதும், பார்க்க நினைப்பதும் வெவ்வேறு விஷயங்கள் என்று பிறகு தான் நாம் உணர முடிகிறது. சில சமயங்களில் முழுமையடையாத தகவல் இருக்கும்போது மூளை இடைவெளிகளை நிரப்புகிறது அல்லது இல்லாத ஒரு படத்தை உருவாக்கி கொள்கிறது.

    மறைந்திருக்கும் கம்பளிப்பூச்சியை கண்டுபிடிங்க..

    இப்படியொரு வகையை சேர்ந்த ஆப்டிகல் மாயை புதிரை தான் நீங்கள் இன்று பார்க்க போகிறீர்கள். ஆம், இந்த அழகான பட்டாம்பூச்சிகள் உள்ள படத்தில், நீங்கள் எதிர்பாராத புதிர் ஒன்று காத்திருக்கிறது. இந்த படத்தில் ஒரு கம்பளிப்பூச்சி மறைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட கம்பளிப்பூச்சியை 30 வினாடிகளுக்குள் உங்களால் கண்டறி முடியுமா என்பதை பரிசோதித்து பாருங்கள். இந்த ஒளியியல் மாயை படத்தில் கம்பளிப்பூச்சி எங்கே உள்ளது என்று யோசிக்கிறீர்களா? இது படத்தின் மேல் அல்லது கீழ் பகுதியில் இருக்கலாம். அல்லது படத்தின் வலது மற்றும் இடது பக்கத்திலும் இருக்கலாம்.

    Also Read : நடக்குற ஸ்டைலை வைத்தே உங்களோட ஆளுமையை அறிந்துகொள்ளலாம்.! 

    இந்த படத்தில் பல்வேறு வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் இடம்பெற்றுள்ளன, அவை ஒரே படத்தில் மறைந்திருக்கும் கம்பளிப்பூச்சியைக் கண்டறியும் முயற்சியில் உங்களைத் தடுமாறச் செய்கிறது. எனவே, இதை கண்டுபிடிக்க உங்களுக்கு சற்று நிதானம் தேவை. நிச்சயமாக, இது உங்களுக்கு சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இன்னும் சற்று நேரம் எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போதும் உங்களால் இதில் மறைந்துள்ள கம்பளிப்பூச்சியைத் கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு சில வழிகளை தருகிறோம்.

    சிகப்பு வளையாத்தல் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது..

    படத்தில் உள்ள பட்டாம்பூச்சிகள் மத்தியில், இறக்கைகள் இல்லாத ஒரு சிறிய கம்பளிப்பூச்சி உள்ளது. வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகளுக்கு மத்தியில் இந்த சிறிய ஊர்ந்து செல்லும் கம்பளிப்பூச்சியை நீங்கள் கண்டு கொள்ள முடியும். இந்த சிறிய கம்பளிப்பூச்சி இந்த படத்தின் வலது பக்கத்தில் உள்ளது. இது படத்தின் வலது பக்கத்தில் உள்ள பட்டாம்பூச்சியின் இறகில் உள்ள பெரிய நீல-கருப்புத் திட்டுகளுக்குக் கீழே உள்ளது. இப்போது, ​​இந்த ஆப்டிகல் மாயை படத்தில் மறைக்கப்பட்ட கம்பளிப்பூச்சியை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Optical Illusion, Trending, Viral

    அடுத்த செய்தி