ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்களால் முடியுமா? படத்தை பார்த்து காணாமல் போன பர்ஸைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

உங்களால் முடியுமா? படத்தை பார்த்து காணாமல் போன பர்ஸைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

முடிஞ்சா கண்டுபிடிங்க

முடிஞ்சா கண்டுபிடிங்க

சிக்கலான படங்களில் மறைந்திருக்கும் உருவம் அல்லது பொருட்களை கண்டறிவது தொடர்பான ‘கண்டுபிடி’ வகை ஆப்டிக்கல் இல்யூஷன்கள் அதிக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மாயாஜாலங்கள் நிறைந்த ஹாரிபாட்டர், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் போன்றவற்றை விடவும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுத்து வருகின்றன. கண்களுக்கு கூர்மையையும், மூளைக்கு கவனத்தையும் கொடுப்பதால் இந்த புதிர் விளையாட்டு அனைவரையும் கவர்ந்திழுந்து வருகிறது. சில நேரம் ஆப்டிக்கல் இல்யூஷனைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பினாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி மூளையை ஆழமாக சிந்திக்க வைப்பதால் இது மனதிற்கான ஒரு வகை பயிற்சி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  மனித மூளையின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளையின் சிக்கல்களை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. மேலும் மனிதர்களின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தவும் சிறந்த வழியாக உள்ளது.

  தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது அல்லது எண்ணிக்கையை சொல்வது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட கண்ணையும், மூளையையும் குழம்ப வைக்க கூடிய அளவிற்கு மிகவும் சிக்கலான ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.

  Read More : உங்கள் காதலில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் – இந்த ஆப்டிகல் இல்யூஷன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

  குறிப்பாக சிக்கலான படங்களில் மறைந்திருக்கும் உருவம் அல்லது பொருட்களை கண்டறிவது தொடர்பான ‘கண்டுபிடி’ வகை ஆப்டிக்கல் இல்யூஷன்கள் அதிக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. தற்போது அப்படிப்பட்ட ஆப்டிக்கல் இல்யூஷனைத் தான் பார்க்கப்போகிறோம்.

  மேலே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். அதில் டேட்டிங்கிற்காக இளம் ஆண், பெண் ஜோடி உணவகம் ஒன்றில் வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டுவிட்டு, கிளம்ப தயாராக உள்ளனர். அப்போது அவர்கள் சாப்பிட்டதற்கான பில்லை எடுத்துக்கொண்டு வெயிட்டர் காத்து நிற்கிறார். பணம் செலுத்துவதற்காக பாக்கெட்டில் கையைவிட்ட இளைஞர் பேரதிர்ச்சியுடன் திருதிருவென விழித்துக்கொண்டிருக்கிறார். காரணம் என்னவென்றால் அவருடைய பாக்கெட்டில் இருந்த பர்ஸைக் காணவில்லை. கேர்ள் பிரெண்ட் முன்னால் அந்த நபர் அவமானப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பர்ஸைக் கண்டுபிடித்து உடனே பில்லை செட்டில் செய்ய வேண்டும். எனவே படத்தை நன்றாக உற்றுப்பார்த்து, அந்த நபர் பர்ஸை எங்கே தவறவிட்டிருக்கார் என்பதைக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.

  அந்த இளைஞர் தனது பர்ஸை உணவத்திற்குள் தான் தவறவிட்டுள்ளார், அதுவும் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் படத்திற்குள் தான் கணகச்சிதமாக மறைந்துள்ளது. படத்தை ஒவ்வொரு மூலையாக சல்லடை போட்டு கண்களால் சலித்து எடுத்துப் பாருங்கள். எங்கோ ஒரு இடத்தில் மறைந்திருக்கும் பர்ஸ் கட்டாயம் கண்ணில் படக்கூடும். ஓட்டல் ஊழியர் வேறு இளைஞரை பார்த்து முறைக்க ஆரம்பித்துவிட்டார்... சீக்கிரமாக பர்ஸ் எங்கே என்பதை கண்டுபிடியுங்கள்...

  எவ்வளவு தேடியும் என்னால் பர்ஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வருத்தப்படுபவர்கள், கீழே உள்ள புகைப்படத்தைப் பார்த்து விடையை அறிந்து கொள்ளுங்கள்.

  கோட் சூட் அணிந்திருக்கும் இளைஞர் தன்னுடன் டேட்டிங் அழைத்து வந்த இளம் பெண்ணின் கூந்தலுக்கு பின்னால் பாருங்கள். அந்த மார்டன் பெண்மணி அமர்ந்திருக்கும் இருக்கையின் மேற்புறத்தில் தான் பர்ஸ் உள்ளது. இப்போது அந்த டிப்டாப் ஆசாமி நிம்மதியாக பில்லைக் கட்டிவிட்டு நடையைக் கட்டலாம்...

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Trending, Viral