தினம்தோறும் பலவிதமான புதிர்களை நாம் இணையத்தில் பார்த்து வருகிறோம். அவற்றில் சில நமது மூளைக்கு அதிக வேலை தருபவையாக இருக்கும். இன்று இணையத்தில் மிகவும் வைரலாக கூடிய இந்த வகை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது ஆர்வத்தை தூண்ட கூடியதாக உள்ளன. நாம் பார்க்க கூடிய விஷயங்கள், பல நேரங்களில் வேறு சிலவற்றை போன்று தோன்றும். இவை நமது எண்ணங்களையும் மாற்றி அமைக்க கூடியவை.
இது சாதாரணமாக எல்லா வகையான விஷயங்களின் மீது நமக்கு ஏற்பட கூடிய ஒரு மாய தோற்றம் தான். மேலும், இந்த வகை ஆப்டிகல் இல்யூஷன் நமது மூளையை வேறொன்றுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்ப செயல்பட வைக்க கூடியவை. எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற மாய தோற்றம் உள்ள படங்களை பலரும் இன்று விரும்பி தேடி வருகின்றனர்.
நெட்டிசன்களுக்கு பொழுது போகவில்லை என்றால், இப்படிப்பட்ட எதாவது ஒரு ஆப்டிகல் இலுஷனை வைத்து கொண்டு அதில் பல ஆராய்ச்சிகளை செய்து விடுவார்கள். ஒளியியல் மாயைகள் நம் கண்களை ஏமாற்ற கூடியதாக இருக்கும். மேலும் இது பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வருகிறது, ஆனால் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால், அவை அனைத்தும் நமது மூளையை ஏமாற்றுவதாக இருக்கும்.
Also Read : இந்தப் படத்தில் மறைந்துள்ள மீனை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.?
அந்த வகையில் தற்போது வைரலான ஒரு மாய படம் ஒன்றை தான் பார்க்க போகிறோம். இந்த படத்தை பார்க்கும் போதே ஒன்றுமே விளங்காத அளவிற்கு தான் இருக்கும். இது 'W' என்கிற எழுத்துக்களை அதிகம் கொண்ட ஆப்டிகல் இலுஷனாக உள்ளது. இதில் நீங்கள் 'M' என்கிற மறைக்கப்பட்ட எழுத்தை கண்டறிய வேண்டும். இது தான் இன்றைக்கான புதிர்.
இந்த புதிரை HecticNick என்பவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டு இருந்தார். அவர் இதில் மறைந்துள்ள M-ஐ ஒரு சதவீத மக்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் பிரச்சனை என்னவென்றால், பல W எழுத்துக்கள் இதில் உள்ளதால் M வடிவத்தை கண்டுபிடிப்பது மிக கடினமானதாக இருக்கும். பலரும் தங்கள் கண்டுபிடித்த M எழுத்தை இங்கே உள்ளது, எங்கே உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதில் ஒருவர், "இந்த படத்தில் M-களை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ளார்." இன்னொருவர், "என்னால் இதில் எங்கு M உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார். மற்றொருவர் பகிர்ந்துகொண்டார், "நான் மூன்றைக் கண்டுபிடித்து விட்டேன்" என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். மேலும் ஒருவர், “இந்தப் படத்தில் மறைந்திருக்கும் M-ஐ கண்டறிவது கடினம்” என்று கமெண்ட் செய்த்துள்ளார்.
சரி, நீங்களும் இந்த M-ஐ கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வி தான் கிடைத்துள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். இதில் மொத்தம் 4 M மறைந்துள்ளது. இந்த படத்தின் கீழே இருந்து எட்டு வரிசைகள் மேலே ஒன்று அமைந்துள்ளது. அடுத்தது இரண்டாவது வரிசையில் நான்காவதாக உள்ளது. அடுத்தது, கீழே இருந்து மேலே இரண்டாவது வரிசையில் அமைந்துள்ளது. கடைசி M மேலிருந்து ஆறாவது வரிசையில் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.