ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கரடிகளுக்கு மத்தியில் உள்ள கோலா-வை 10 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்..!

கரடிகளுக்கு மத்தியில் உள்ள கோலா-வை 10 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்..!

கோலாவை கண்டுப்பிடிங்க

கோலாவை கண்டுப்பிடிங்க

சோஷியல் மீடியாவில் எவ்வளவு விஷயங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டாலும் கூட சமீப மாதங்களாக பிரெயின் டீஸர் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூஷன்களில் அடங்கி இருக்கும் புதிர்களை கண்டறிய சவால் விடுக்கப்படுவதால் அவற்றுக்கான பதிலை எப்படியாவது கண்டறிந்து விட வேண்டும் என்ற முனைப்பில் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். தவிர ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பது சாதனை உணர்வை வழங்குவதால் நெட்டிசன்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். ஏனென்றால் இதில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்களையும், மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன்கள் கண்டுபிடிக்க எளிதாக இருந்தாலும் பெரும்பாலானவை நம் பொறுமையை சோதிக்கும். அதேபோல ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன்களை பார்த்த உடனேயே அதில் மறைந்திருப்பவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் எண்டு தோன்றும். ஆனால் உண்மையில் அதற்கான விடையை கண்டறிவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இப்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனும் கிட்டத்தட்ட இதே போல தான்.

Read More : உங்கள் கண்களுக்கு சவால்... அணில்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் வன பகுதியில் மரத்தின் கீழும், மரத்தின் மேல் ஏறும் கரடிகளை பார்ப்பீர்கள். பல கரடிகளுக்கு மத்தியில் ஒரு கோலா-வும் (koala) இருக்கிறது. ஆனால் கோலாவும் பார்ப்பதற்கு கரடி போலவே ஓரளவு தோற்ற ஒற்றுமையை கொண்டிருக்கிறது. எனவே கரடிக்கு மத்தியில் இருக்கும் கோலா-வை நீங்கள் கண்டறிய வேண்டும். இதுவே இந்த ஆப்டிகல் இல்யூஷனின் சவால். முதல் பார்வையிலேயே கரடிகளின் பின்னணியில் இருக்கும் கோலாவை அடையாளம் காண்பது கடினம்.

எனினும் சில வினாடிகள் உற்று பார்த்தால் ஈஸியாக கண்டுபிடித்து விட போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வெறும் பத்தே வினாடிகள் தான் உங்களுக்கு டைம், அதற்குள் கண்டுபிடித்தல் மட்டுமே நீங்கள் சவாலில் வெற்றி பெற்றதாக கருதி கொள்ள முடியும். இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பார்த்து சவாலில் ஜெயிக்க முயற்சி செய்யுங்கள்.

கூர்மையான பார்வை கொண்டவர்கள் மட்டுமே கோலா-வை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியும். இந்த சவால் ஒப்பீட்டளவில் எளிதானது என்பதால் பல் நெட்டிசன்கள் 10 வினாடிகளுக்குள் விடையை எளிதாக கண்டுபிடித்து விட்டதாக கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். மேலே உள்ள இமேஜை பார்த்து அதில் இருக்கும் கோலா-வை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா.!

நீங்கள் இன்னும் அந்த கோலா-வை கண்டுபிடிக்காவிட்டால் நாங்கள் இங்கே உங்களுக்கு ஹின்ட் கொடுத்து உதவுகிறோம். கரடிகளை விட தோற்றத்தில் சிறிது வித்தியாசத்தை கொண்டுள்ளது இங்கே இருக்கும் கோலா. இன்னும் உங்களால் விடை கண்டறிய முடியாவிட்டால் கீழ் பதில் வட்டமிட்டுள்ள இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral