ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

15 நொடிகளில் டக்குனு கண்டுபுடிச்சா உண்மையாவே நீங்க டக்கரு தான்..!

15 நொடிகளில் டக்குனு கண்டுபுடிச்சா உண்மையாவே நீங்க டக்கரு தான்..!

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன் படம் என்றாலே அதில் சில புதிர்கள் இடம்பெற்றிருக்கும் என்பது உறுதி. அந்தப் புதிர்களை எத்தனை நொடிகளில் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து உங்கள் சிந்தனை திறன் மற்றும் கவனித்தல் திறன் போன்றவற்றை கணக்கிடலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத் தோற்றம் கொண்ட படங்கள் நம் சிந்தனைக்கு சவால் விடுப்பதாக அமையும். சில படங்கள் சட்டென்று பார்க்கையில் ஒரு கோணத்திலும், சற்று உன்னித்துப் பார்க்கையில் வேறு ஒரு கோணத்திலும் காட்சி அளிக்கும். அதே சமயம், சில படங்களில் வேறு சில உருவங்கள் மறைந்த நிலையில் இருக்கும்.

படத்தில் மறைந்திருக்கும் புதிருக்கு விடை காண முயற்சி செய்தால், அது உங்களுக்கு சிறப்பான பொழுதுபோக்காக அமையும். குறிப்பாக, பணிச்சுமை, மன அழுத்தம் போன்ற பிரச்சினையால் அவதிபடுபவர்களுக்கு இது நிவாரணம் தருவதாக அமையும்.

எப்படியாகினும், ஆப்டிக்கல் இல்யூஷன் படம் என்றாலே அதில் சில புதிர்கள் இடம்பெற்றிருக்கும் என்பது உறுதி. அந்தப் புதிர்களை எத்தனை நொடிகளில் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து உங்கள் சிந்தனை திறன் மற்றும் கவனித்தல் திறன் போன்றவற்றை கணக்கிடலாம்.

Read More : பொம்மை என நாகபாம்பு உடன் விளையாடிய சிறுவன்... அடுத்து நடந்தது? - ஷாக் வீடியோ

உங்களுக்கான புதிர்

செய்தியில் நீங்கள் பார்க்கும் பழங்கால வரை படத்தில் சட்டென்று பார்க்கையில் மூன்று இளம் பெண்கள் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால், உங்கள் சிந்தனைக்கு வேலைக்கு கொடுக்கும் வகையில் இதில் அமைந்திருக்கும் புதிர் என்னவென்றால், அந்த இளம் பெண்களுக்கான காதலர்கள் மூவர் இதே படத்தில் தான் இருக்கின்றனர். அழகான ஓவியத்தில் அந்த ஆண்களை கண்டறிவதுதான் உங்களுக்கான சவாலுக்குரிய விஷயம் ஆகும்.

மறைந்துள்ள நபர்களை 15 நொடிகளில் கண்டறிய முடியுமா?

படத்தில் மறைந்த நிலையில் உள்ள பெண்களின் காதலர்களை கண்டறிவது உங்களுக்கு சிரமமான காரியமாக உள்ளதா? அப்படி என்றால், உங்களுக்கான டிப்ஸ் இதோ. படத்தில் உள்ள மரக்கிளை பகுதிகளை உற்று நோக்கி பாருங்கள். அதில் தான் அந்த இளைஞர்களின் உருவங்கள் இருக்கின்றன. இன்னும் உங்கள் சௌகரியம் கருதி, படத்தில் மனித முகங்கள் இருக்கும் பகுதியானது வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

உங்களுக்கான விடை இதோ

படத்தின் இடது பக்கத்தில் உள்ள மரக் கிளையில் இளைஞரின் முகம் ஒன்று மறைந்துள்ளது. இதே படத்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள காற்றாலை ஓரமாக இரண்டு நபர்களின் படத்தை நீங்கள் அடையாளம் காண முடியும். மனிதர்களின் முகங்கள் ஏறக்குறைய மரத்தின் நிறத்தை ஒட்டி அமைந்திருப்பதால் உங்களுக்கு இதனை கண்டுபிடிப்பது சவால் மிகுந்ததாக இருக்கலாம். இருப்பினும் படத்தில் உள்ள புதிருக்கான விடையை சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால், இதே படத்தை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி சவால் விடுக்கலாம். உங்கள் நண்பர்கள் எத்தனை நொடிகளில் புதிருக்கான விடைகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை டைம் வாட்ச் வைத்து கண்காணித்து, அவர்களது சிந்தனை திறனை நீங்கள் கணக்கிடலாம்.

First published:

Tags: Game, Optical Illusion, Trending, Viral