முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 10 வினாடிகள் தான் டைம்..! முடிந்தால் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கண்டுப்பிடிங்க..

10 வினாடிகள் தான் டைம்..! முடிந்தால் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கண்டுப்பிடிங்க..

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

ஆரம்பத்தில் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களைக் கண்டுபிடிப்பது என்பது சிரமம் தான். இருந்தாலும் நீங்கள் புதிர் விளையாட்டைக் கண்டுபிடிக்க நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்பதைப் பொறுத்துத் தான் உங்களின் ஐக்யு (IQ level) அளவை நீங்களே கண்டுபிடித்துவிடமுடியும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ஒரு படத்திற்குள் மறைந்திருக்கும் விஷயங்களைக் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நமது மூளைக்கு இந்த புகைப்படங்கள் சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். இந்தப் பதிலைக் கண்டுபிடிக்க நீங்கள் முயலும் போது உங்களது கண்களுக்கும், மூளைக்கும் நிச்சயம் சவால் விடும். இதுப்போன்ற ஒளியியல் மாயைப் புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்படி என்ன தான் இருந்தது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

பொம்மைகளுக்குள் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கி…

தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள புகைப்படம் ஒன்றில், சிங்கங்கள், நீர்யானைகள், பறவைகள், யானைகள், மான்கள், குரங்குகள் மற்றும் புலிகள் உள்பட பல வண்ணமயமான பொம்மைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த ஏராளமான பொம்மை விலங்குகளுக்குள் தான் ஒரு ஒட்டகச்சிவிங்கி ஒன்று மறைந்திருக்கிறது. இதை நீங்கள் குறிப்பிட்ட 10 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால், நிச்சயம் உங்களின் மூளையின் செயல்திறன் சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். பொம்மைகளுக்குள் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை நீங்கள் கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் கவனம் செலுத்திப்பார்க்கவில்லை என்றால் நிச்சயம் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இப்படத்தில் மறைந்திருக்கும் புகைப்படத்தை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இருப்பினும், சில தனிநபர்கள் படத்தை முழுமையாகப் பார்த்தால், ஒவ்வொரு சிறிய விவரத்தையும் ஆராய்ந்தால், தீர்வை அடையாளம் காண முடியும். இப்பொழுது நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான டிப்ஸ் இங்கே..

Read More : மூன்று தலைகள் கொண்ட சிறுத்தையா? இணையவாசிகளை குழப்பிய போட்டோ.. உண்மை இதுதான்!

டிப்ஸ் 1: புகைப்படத்தில் பல பொம்மை விலங்குகள் உள்ளது. இதில் தான் ஒட்டகச்சிவிங்கியும் உள்ளதால் ஒவ்வொரு கார்னரிலும் நீங்கள் நன்கு உற்றுப் பாருங்கள். இப்பொழுதாவது நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையா? இதோ உங்களுக்கான அடுத்த டிப்ஸ்..

டிப்ஸ் 2 : நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தின் கீழ் வலது மூலையில் ஊதா நிற பொம்மை ஒட்டகச்சிவிங்கி உள்ளது.

இப்போது நீங்கள் 10 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடிக்க முடிந்தால், அது உங்களது புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது. ஆய்வுகளின்படி, சவாலான பிரச்சனைகளில் வேலை செய்வதன் மூலம் உங்களின் மூளைக்கு எவ்வளவு சவால் விடுகிறீர்களோ? அவ்வளவு புத்திசாலியாகி விடுவீர்கள் என்று அர்த்தம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral