ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த படத்தில் மறைந்திருக்கும் 2வது நாயை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள் ஜீனியஸ்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் 2வது நாயை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள் ஜீனியஸ்!

2வது நாயை கண்டுப்பிடித்தால் ஜீனியஸ் தான்

2வது நாயை கண்டுப்பிடித்தால் ஜீனியஸ் தான்

Optical Illusion | ஒரு படத்தில் ஒளிந்திருக்கும் விலங்குகள், புகைப்படங்களை 5, 10, 20 வினாடிகள் முதல் 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையில் இந்த ஒளியில் மாயை புகைப்படங்கள் அமைந்திருக்கும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் இணையத்தைத் தேவையில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்துகள் பரவலாக எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் தான் கடந்த சில மாதங்களாக ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் சுவாரஸ்யமானப் பொழுதுபோக்கு விளையாட்டுகள் இணையத்தில் வைரலாகிறது. ஒரு படத்தில் ஒளிந்திருக்கும் விலங்குகள், புகைப்படங்களை 5, 10, 20 வினாடிகள் முதல் 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையில் இந்த ஒளியில் மாயை புகைப்படங்கள் அமைந்திருக்கும்.

  இதுப்போன்று நெட்டிசன்களுக்கு சவால் விடும் வகையிலான ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது. இரண்டு பெண்கள் ஒரு பூங்காவில் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதைப் போன்று புகைப்படம் அமைந்திருக்கும்.

  அவர்களுக்குப் பின்னால் பசுமையான மரங்களும், புல்லும் இடம் பெற்றிருக்கும். வலது புறத்தில் நீல நிற ஆடை அணிந்திருக்கும் பெண்ணுக்குப் பின்னால் ஒரு நாய் இருப்பதையும் நாம் காணமுடியும். ஆனால் இந்த புகைப்படத்தில் மற்றொரு நாய் ஒன்று ஒளிந்திருக்கிறது என்றும், இந்த 2 வது நாயைக் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் தான் ஜீனியஸ் என்று நமக்கு சவால் விடுகிறது.

  Read More : படிச்சிட்டே இருந்தா எனக்கு வயதாகிடும்ல... படிக்க அழும் குழந்தையின் வீடியோ வைரல்!

  மறைந்திருக்கும் 2 வது நாயை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள்:

  பூங்காவில் நின்று பேசிக்கொண்டிருக்கும் பெண்களை முதலில் பார்க்கும் போது ஒரு நாய் மட்டும் தான் உடனே நம் கண்களுக்குத் தெரியும். அந்த 2 வது நாய் எங்கு உள்ளது என தேட முயற்சிப்போம். நீங்களும் முயற்சி செய்யுங்கள். கண்டுபிடித்துவிட்டீர்களாக?

  எங்கே அந்த இரண்டாவது நாய் என்று தேடுங்கள். 7 வினாடிகளுக்குள் நாய் எந்த இடத்தில் இருக்கின்றது என உங்களுக்கு தெரிகிறதா? இல்லை என்றால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்..

  டிப்ஸ் 1:

  பூங்காவில் நின்று பேசும் இரண்டு பெண்கள் பேசுவது போன்றுள்ளப் படத்தில், இடது பக்கத்தில் நிற்கும் பெண்ணின் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள். அந்த பெண்ணின் கையில் நாயின் முகம் உங்களுக்கு தெரியவரும். இந்த புகைப்படத்தைத் தலைகீழாக திருப்பிப்பாருங்கள் அழகான நாய் கையில் வைத்திருப்பது போன்று உங்களுக்குத் தெரியவரும். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

  ஒளியியல் மாயை புகைப்படத்தை 7 வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் உங்களது கண்காணிப்பு திறன் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் இரண்டாவது நாயைக் கண்டுபிடிப்பது மிகவும் தந்திரமானதாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் இப்புகைப்படங்கள் அதிகளவில் கவர்ந்துள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Tamil Nadu, Trending, Viral