ஆப்டிக்கல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள்தான் இன்றைக்கு நெட்டிசன்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. தேவையில்லாத வீடியோக்கள், புகைப்படங்கள் பார்ப்பதற்கு இடையில், இது போன்ற புதிர் விளையாட்டில் அனைவரின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அமைகிறது. சில நேரங்களில் புதிர் போடும் ஒளியியல் மாயைப் புகைப்படங்களைக் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நிச்சயம் உங்களின் அறிவுத்திறன் மற்றவர்களை விட மேலோங்கி இருக்கும்.
இவ்வாறு உங்களது கண்கள் மற்றும் மூளைக்கும் சவால் விடும் வகையிலான புகைப்படங்கள் தான் சமீபத்தில் தான் இணையத்தில் ஆக்கிரமித்துள்ளது.இதுப்போன்ற ஒரு புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்ன இருந்தது? என நாமும் கண்டறிய முயற்சி செய்வோமா?
Read More : மணமேடையில் மணமக்கள் செய்த அநாகரீக செயல்... முகம்சுழித்த நெட்டிசன்ஸ் - வீடியோ வைரல்
தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படத்தில் மூன்று சிறுவர்கள் ஒரு பொம்மை கடையில் நிற்கின்றனர். இவர்களுக்குப் பின்னால் ஒவ்வொரு அலமாரிகளிலும் கார் போன்ற பல பொம்மைகள் உள்ளன. அங்கு வைத்துள்ள அனைத்துமே நமது கண்களுக்குத் தெரியும்போது இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஆம் இந்த புகைப்படங்களுக்கு நடுவில் தான் கற்றாழை ஒன்று மறைந்திருக்கிறது. முதல் பார்வையில் நிச்சயம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதே சமயம் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள் நிச்சயம் உங்களால் கண்டுபிடிக்க முடியும்… இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே…
டிப்ஸ் 1 ..
இந்த புகைப்படத்தை முதலில் நன்கு உற்று நோக்குங்கள். படத்தில் வலது மற்றும் இடது புறம் உள்ள அலமாரிகளை உன்னிப்பாக கவனியுங்கள். இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான இரண்டாவது டிப்ஸ்..
டிப்ஸ் 2:
புகைப்படத்தின் வலது புறத்தில் அமைந்திருக்கும் இரண்டாவது அலமாரியை உற்றுப்பாருங்கள். இரண்டாவது அடுக்கில் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள பொம்மைகளுக்குப் பின்னால் பாருங்கள்.. இப்பொழுதாவது கண்டுபிடித்துவிட்டாச்சா?நிச்சயம் கண்பிடித்திருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் எவ்வித டிப்ஸ்களையும் பயன்படுத்தாமல் கற்றாழைய நீங்கள் குறிப்பிட்ட நேர வரம்பிற்குள் கண்டுபிடிக்க முடிந்தது என்றால் நீங்கள் தான் ஜீனியஸ். மேலும் உங்களுக்கு நல்ல கண்காணிப்புத் திறன் மற்றும் மூளையும், கண்களும் மிகுந்த கூர்மையுடன் செயல்படுகிறது என்று அர்த்தம். இவ்வாறு அறிவுக்கும்,கண்களுக்கும் சவால் விடும் வகையிலான பல்வேறு வகையான ஆப்டிக்கல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயைப் புகைப்படங்களை நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். நீங்கள் கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து இந்த புதிர் விளையாட்டை இன்றே ஆரம்பியுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral