முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த படத்தில் இருக்கும் எலும்பை 9 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்..! டிரை பண்ணுங்க

இந்த படத்தில் இருக்கும் எலும்பை 9 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்..! டிரை பண்ணுங்க

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ஒரு படத்திற்குள் மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுவதோடு, அந்த புகைப்படத்தில் பல புதிர்களும் ஒளிர்ந்திருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ஒரு படத்திற்குள் மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுவதோடு, அந்த புகைப்படத்தில் பல புதிர்களும் ஒளிர்ந்திருக்கும்.  உங்களின் ஐக்யு அளவை (IQ level) நீங்களே இந்த புதிர்விளையாட்டின் மூலம் கண்டுபிடித்துவிடமுடியும். இதுப்போன்ற ஒரு ஒளியியல் மாயைப் புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. என்ன அதில் இருந்தது என நாமும் இங்கே அறிந்துக் கொள்வோம்..

படத்திற்குள் மறைந்திருக்கும் எலும்பைக் கண்டுபிடிக்கவும்….

தற்போது நமது கண்களுக்கு முன்னால் இருக்கும் புகைப்படம் ஒன்றில், ஒரு பெண் பச்சை நிற குடையைப் பிடித்து நிற்பது போன்று தெரிகிறது. அந்த குடைக்குள் அவர் மட்டுமில்லை மழையில் நனையாமல் இருப்பதற்காக சிறிய நாய், பூனைகள் இருப்பது போன்ற நமது கண்களுக்குள் தெரிகிறது அல்லவா? இதனுள் தான் எலும்பு ஒன்று உள்ளது. இதைத் தான் நீங்கள் 9 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த புதிரை மேதைகள் தான் கண்டுபிடிக்கமுடியும் என சவால் விட்டுள்ள நிலையில், நீங்களும் புத்திசாலிகளின் லிஸ்டில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் இப்ப டிரை பண்ணிப்பாருங்கள்..

உங்களின் கவனத்தை சிதறவிடாமல் படத்திற்குள் மறைந்திருக்கும் எலும்பைக் கண்டுபிடிக்க முயலுங்கள். குடைக்குள் இருக்கும் நாய், பூனைகள் இடையே தான் எலும்பு உள்ளது. வேறொங்கும் இல்லை. எனவே புகைப்படத்தை நன்றாக உற்று நோக்குங்கள்.. உங்களுக்கு சில நிமிடங்கள் டைம் தருகிறோம்… இப்பவாவது நீ ங்கள் எலும்பைக் கண்டுபிடிச்சாச்சா?.... இல்லையென்றால் இன்னமும் முயற்சி செய்யவும்.

விரைந்து கண்டுபிடிக்க முயலுங்கள். எலும்பு படத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த படத்தில் சிறிய பகுதியை விட்டு வேறெங்கும் நீங்கள் தேட தேவையில்லை. இப்பவாது கண்டுபிடிச்சிடீங்களா? ஏற்கனவே ஒதுக்கபட்ட நேரத்தின் பாதி நேரம் முடிந்துவிட்டது.

Read More : லாஜிக் புரிந்துவிட்டால் இந்த கணக்கை 30 வினாடிகளில் போட்டுவிடலாம்.. எவ்ளோ நேரம் எடுத்தீங்க?

குறிப்பிட்ட 9 வினாடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்களும் மேதை தான். இல்லையென்றால் இன்னமும் உங்களின் கண்காணிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.எலும்பு எங்குள்ளது என தெரிய வேண்டுமா? இதோ பதில் இங்கே…. உங்களுக்கு முன்னால் இருக்கும் படத்தின் வலது பக்கத்தில் உள்ள நாயின் உடலில் தான் எலும்பு உள்ளது. நன்றாக கவனித்துப்பார்க்கவும்.

இதுப்போன்ற புதிர் போடும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களை முதன்முறையாக முயற்சிப்பவர்களுக்கு இது சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அனுபவம் வாய்ந்த புதிர்களை விட முதன்முறையாக வருபவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படலாம். இதிலிருந்து நீங்கள் எவ்வளவு நீங்கள் எவ்வளவு கவனத்துடன் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே சோதித்துக்கொள்ள முடியும். இனி நீங்களும் வீட்டில் இதுப்போன்ற ஒளியியல் மாயைப் புகைப்படங்களை டிரை பண்ணிப்பாருங்கள்…

First published:

Tags: Optical Illusion, Trending, Viral