முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மாறி இருக்கும் எழுத்தை கண்டுப்பிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்..! ஆனால் 6 விநாடி தான் டைம்..

மாறி இருக்கும் எழுத்தை கண்டுப்பிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்..! ஆனால் 6 விநாடி தான் டைம்..

வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன்

Bot க்குள் Bat எங்கே இருக்கிறது ? மறைந்திருக்கும் வார்த்தையை 6 விநாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு இணையத்தில் டிரெண்டாகி வரக்கூடிய விஷயங்களில் ஒன்று தான் ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள். ஒரு படத்திற்குள் மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுவதோடு, அந்த புகைப்படத்தில் பல புதிர்களும் ஒளிர்ந்திருக்கும். அந்த பதிலைக் கண்டுபிடிக்க முயலும் போது உங்களது கண்களுக்கும், மூளைக்கும் சவால் விடும் வகையில் அமையப்பெற்றிருக்கும். நிச்சயம் எடுத்தவுடனே ஆரம்பத்தில் யாராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். இதை வைத்து உங்களது ஐக்யு அளவை நீங்களே சோதித்துக்கொள்ள முடியும்.

இம்முறை ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்று சற்று வித்தியாசமாக ஒரு ஆங்கில வார்த்தையில் உள்ள பிழையை கண்டுபிடிக்க நமக்கு சவால் விடுகிறது. நம் பள்ளி நாட்களில் சில ஆங்கில வார்த்தைகளைத் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக எழுதும் போது சில நேரங்களில் குழப்பமடைந்துத் தவறுதலாக எழுதியிருப்போம். ஆனால் நம்மால் நாம் எங்கு தவறுதலாக எழுதியிருக்கிறோம் என்பதையே கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு புதிர் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றில் அனைத்து இடங்களிலும் bot என்ற ஆங்கில வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு இடையில் தான் bat என்ற வார்த்தையும் உள்ளது. இதைத் தான் இப்பொழுது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களின் கண்காணிப்புத்திறன் சரியாக இருந்தால் பார்த்தவுடனே அல்லது சில வினாடிகளில் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

Read More : ஆப்டிகல் இல்யூசன்: வரிக்குதிரை கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிங்க... 10 செகண்ட்தான் டைம்..!

அல்லது பல நேரங்கள் நீங்கள் மெனக்கெட வேண்டியிருக்கும். இதோ உங்களின் கண்காணிப்புத்திறன் எந்தளவிற்கு உள்ளது? என சோதிக்க ரெடியாகிக்கொள்ளுங்கள். இந்த ஆப்டிகல் மாயை படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு நிறைய பொறுமையும் கவனமும் தேவை. இந்த புதிரை நீங்கள் எவ்வளவு விரைவாக தீர்க்க முடியும் என்பதே இங்குள்ள சவால். இந்த பணியை 6 வினாடிகளில் முடிக்க முடிந்தால், நீங்கள் உங்களை ஒரு மேதை என்று கருதலாம்!

இதோ உங்களுக்கான டைம் ஸ்டார்ட்….

…....

…....

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இதுவரை நீங்கள் தவறுதலாக உள்ள ஆங்கில வார்த்தையை நீங்கள் கண்டுபிடிச்சாச்சா.. இல்லையென்றால் இதோ உங்களுக்கான டிப்ஸ்..

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தில், 3 வது ரோலில் இரண்டாவது இடத்தில் தான் Bot க்கு நடுவில் Bat என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதை நீங்கள் சற்று டைம் எடுத்துக்கூட தீர்த்துவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்பிடிக்கிறீர்களா? என்பது தான் தான் இங்கே சவால்.

ஒரு வேளை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் உங்களின் மூளையின் செயல்திறன் சிறப்பாக செயல்படுகிறது என அர்த்தம்.

First published:

Tags: Optical Illusion, Trending News, Viral News