ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

முடிஞ்சா மறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்டுப்பிடிங்க..!

முடிஞ்சா மறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்டுப்பிடிங்க..!

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

கிறிஸ்துமஸ் மரத்தில் மறைந்திருக்கும் சாண்டா கிளாஸைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள். உங்கள் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் பல பொம்மைகள் இந்த படத்தில் இருப்பதால், சாண்டா கிளாஸைக் கண்டுபிடிப்பது மிகவும் தந்திரமாகத் தோன்றலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு சாதாரண மனித மூளையால் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வெவ்வேறு உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களை வித்தியாசமாகப் பார்க்க முடியும். ஆப்டிகல் மாயை என்பது மனதை பல வகையில் சிந்திக்க தூண்டும். ஒரு பொருள் அல்லது வரைபடத்தின் வடிவத்தையே இது மாற்று கோணத்தில் நமக்கு காட்டும். மேலும், இந்த வகை ஆப்டிகல் மாயை புதிர்கள் நமது மூளைக்கே சவாலான ஒன்றாக இருக்கும். உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் கொண்ட பல வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன. இந்த ஒளியியல் மாயைகள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாகும். இப்படியொரு வித்தியாசமான புதிரை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த படத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்திற்குள் சாண்டா கிளாஸ் எங்கு மறைந்திருக்கிறார் என்று கண்டுபிடியுங்கள். இது தான் இன்றைக்கான புதிர்.

உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த படத்தில் கிறிஸ்மஸ் மரத்திற்குள் மறைந்திருக்கும் சாண்டா கிளாஸைக் கண்டறிவதற்கான சவாலை எதிர் கொள்ளுங்கள். இந்த படத்தில், கிறிஸ்துமஸ் மரத்தை சுற்றி குழந்தைகள் விளையாடுவதை நீங்கள் காணலாம். மேலும், இதில் சில குழந்தைகள் பரிசுகளைத் திறந்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாக்ஸைத் தொங்கவிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் ஏராளமானோர் இருப்பதால் இதிலுள்ள சாண்டாவை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் தான்.

இந்த படத்தில், குழந்தைகளுக்காக பரிசுகளை வைத்துவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. எனவே, கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சாண்டா கிளாஸைக் கண்டுபிடிப்பது இன்னும் சவாலானதாக இருக்கும். கழுகுப் பார்வை கொண்ட பார்வையாளர்களால் மட்டுமே சாண்டா கிளாஸை இந்த படத்தில் காண முடியும். இந்த படம் பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.

11 வினாடிகளில் கண்டுபிடிப்பீர்களா?

இந்த ஆப்டிகல் மாயை படத்தை உன்னிப்பாகப் பார்த்து, கிறிஸ்துமஸ் மரத்தில் மறைந்திருக்கும் சாண்டா கிளாஸைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள். உங்கள் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் பல பொம்மைகள் இந்த படத்தில் இருப்பதால், சாண்டா கிளாஸைக் கண்டுபிடிப்பது மிகவும் தந்திரமாகத் தோன்றலாம். ஆனால் அறைக்குள் இருக்கும் பொருட்களை உன்னிப்பாகக் கவனித்தால், சாண்டா கிளாஸை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் சாண்டா கிளாஸைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்! சாண்டா கிளாஸ் எங்கே உள்ளார் என்பதை கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் வலது பக்கத்தைப் பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி சாண்டா கிளாஸ் மணிகள் மற்றும் கரும்புகளுக்கு இடையில் மறைந்துள்ளார்: கிறிஸ்துமஸ் மரத்தின் உள்ளே இருக்கும் சாண்டா கிளாஸை சில நொடிகளில் அடையாளம் காண முடிந்தால், அது உங்களின் அசாதாரண புத்திசாலித்தனம் மற்றும் நினைவாற்றலின் அடையாளமாக இருக்கிறது. கடினமான புதிர்களுடன் உங்கள் மூளைக்கு எவ்வளவு பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒளியியல் மாயைகள் எப்பொழுதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய சிறந்த முடிவுகளை அளிக்கிறது. நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும். எனவே, இது போன்ற ஆப்டிகல் மாயைகளை அவ்வப்போது முயற்சி செய்து வருவது சிறப்பு.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral