ராகமும் கீரிப் பிள்ளையும் ஜென்ம விரோதிகளாகச் சண்டை போடுவது வழக்கம் தான். ஆனால் சேற்று நீரில் ராகங்களின் தலைவன் ராஜ ராகமும், சீறிய கீரிப் பிள்ளையும் நேருக்கு நேர் சண்டை போடுவது அரியதே. அப்படி ஒரு சண்டையில் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், சேற்று நீரில் ராஜ நாகம் ஒன்று உள்ளது. அதன் எதிரில் சினத்துடன் கீரிப் பிள்ளை நின்று கொண்டிருக்கிறது. கீரிப் பிள்ளை, ராஜ நாகத்தில் தலையைக் குறி வைத்துத் தாக்க நாகமும் ஈடுகொடுத்து சண்டை போடுகிறது.
ஒரு கட்டத்தில் ராஜ நாகம் நம்பலுக்கு எதுக்குபா ஒம்பு என்று திரும்பிக் கொள்ள, அதனை விடாமல் சீண்டி நீர்த் தேக்கத்தின் மறுபக்கம் சென்று மீண்டும் நேருக்கு நேர் மோதலில் கீரிப் பிள்ளை ஈடுபட்டுள்ளது. இரண்டும் புரட்டிப் போட்டு சண்டை போட்டுக் கொள்கிறது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்களில் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டு விலங்குகளின் வீடியோவை பதிவிடும் பக்கத்தில் இந்த காட்சி பதிவிடப்பட்டுள்ளது.
பொதுவாக ராஜ நாகங்களுக்கு விஷம் வீரியத்துடன் இருக்கும். ஆனால் நாகத்திற்குக் கீரிப் பிள்ளைக்கு நடக்கும் பெரும்பாலான சண்டைகளில் கீரிப் பிள்ளை தான் வெற்றி பெரும். இந்த சண்டையில் முடிவு பதிவிடப்படவில்லை என்றாலும் கீரிப் பிள்ளையில் கை தான் அங்கு ஓங்கியிருந்தது என்று தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: King cobra, Viral Video, Wild Animal