ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

“திக்குமுக்காடிபோன கூகுள்.. உலகமே இதைத்தான் தேடியிருக்கு.. 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக்..” ஷாக்கான சுந்தர் பிச்சை!

“திக்குமுக்காடிபோன கூகுள்.. உலகமே இதைத்தான் தேடியிருக்கு.. 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக்..” ஷாக்கான சுந்தர் பிச்சை!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கால்பந்துக்கு எந்த அளவு கிரேஸ் இருக்கிறது என்பதை நம் அண்டை மாநிலமான கேரளாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இல்லாத அளவு டிராபிக் நேற்று இரவு ஏற்பட்டதாகவும் அது பிபா உலக கோப்பை இறுதி ஆட்டம் பற்றியது எனவும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதினர். நட்சத்திர வீரரான மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்றிருந்தார். மேலும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஃபுட்பால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இருந்தது.

அதற்கு ஏற்றார் போல் நேற்று நடைபெற்ற மேட்சும் மிகவும் விருவிருப்பாக சென்றது. பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனாலிட்டியில் தான் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே ஹாட்ரிக் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பே பெற்றார். இப்படி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பிரான்ஸ் அணி தோற்றது. மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டத்தால் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவுக்கு அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானே களத்தில் நேரடியாக ஆரத்தழுவி பாராட்டி ஆறுதல் கூறினார்.

கால்பந்துக்கு எந்த அளவு கிரேஸ் இருக்கிறது என்பதை நம் அண்டை மாநிலமான கேரளாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அர்ஜெண்டினா வெற்றியால் அந்நாட்டினரை போலவே கேரள மக்கள் பரவசமடைந்தனர்.

இந்நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை செய்திருந்த ட்வீட்டில், “கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் அதிக டிராபிக் வந்தது நேற்று இரவு தான். அதுவும் உலக கோப்பை கால்பந்து பற்றி தான் அனைவரும் தேடியுள்ளனர். உலகமே இந்த ஒரு செய்தியை தேடுவது போல இருந்தது” என குறிப்பிட்டார்.

இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: FIFA World Cup 2022, Google, Sundar pichai