• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தண்ணீர் தொட்டியில் சிக்கி கொண்ட புதிதாக பிறந்த யானை குட்டி - வைரலாகும் மீட்பு வீடியோ!

தண்ணீர் தொட்டியில் சிக்கி கொண்ட புதிதாக பிறந்த யானை குட்டி - வைரலாகும் மீட்பு வீடியோ!

யானை குட்டி  வைரலாகும் மீட்பு வீடியோ

யானை குட்டி வைரலாகும் மீட்பு வீடியோ

கென்யாவில் இருக்கும் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையில் (Sheldrick Wildlife Trus) நடந்த இந்த ருசிகர சம்பவம் அங்கிருக்கும் கேமராவில் பதிவாகியுள்ளது.

  • Share this:
உலகம் முழுவதிலும் ஆபத்தில் சிக்கும் பல்வேறு விலங்குகள் அவ்வப்போது மீட்கப்படும் சம்பவங்களை நாம் டிவி செய்திகள் அல்லது சோஷியல் மீடியாக்களில் பார்த்து வருகிறோம். சில நேரங்களில் விலங்குகளின் மீட்பு சம்பவம் மக்கள் மனதில் புன்னகையை வர வைத்து விடும். அப்படிப்பட்ட மீட்பு சம்பவம் பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். புதிதாக பிறந்த ஒரு யானை குட்டி மற்றும் அதன் குடும்பத்தின் கதை சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிதாகப் பிறந்த குட்டி யானை மீட்கப்பட்டதை விவரிக்கும் வகையில் இன்ஸ்டாவில் ஷேர் செய்யப்பட்ட 2 வீடியோக்கள் நெட்டிசன்களின் இதயத்தை வென்று தற்போது வைரலாகி வருகின்றன.

கென்யாவில் இருக்கும் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையில் (Sheldrick Wildlife Trus) நடந்த இந்த ருசிகர சம்பவம் அங்கிருக்கும் கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இந்த மீட்பு காட்சிகளை அந்த வனவிலங்கு அறக்கட்டளை இன்ஸ்டாவில் வீடியோவாக போஸ்ட் செய்துள்ளது. உண்மையில் அந்த யானைக் குட்டி தற்செயலாக தண்ணீர் இருந்த மிக சிறிய தொட்டியில் விழுந்து விட்டது. புதிதாக பிறந்த யானை குட்டி என்பதால் அந்த சிறிய தொட்டியிலிருந்து அதற்கு வெளியேற தெரியவில்லை.இந்த சம்பவம் பற்றிய விடியோக்களை ஷேர் செய்த ஷெல்ட்ரிக் அறக்கட்டளை, இந்த சம்பவம் இந்த ஆண்டு துவக்கத்தில் Ithumba stockades-க்கு வெளியே நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிய தொட்டியை சுற்றி சில யானைகள் நின்று சத்தமிடுவதை தங்கள் காவலர்கள் கண்ட பின்னர் விரைந்து சென்று அங்கெ பார்த்த போது, புதிதாக பிறந்த யானை குட்டி ஒன்று தண்ணீர் இருக்க கூடிய சிறிய தொட்டியில் சிக்கி இருப்பதை பார்த்தனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்லா தொட்டிகளிலும் குட்டிகள் விழுந்து விடாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், அந்த யானை குட்டி எப்படியோ தவறுதலாக உள்ளே விழுந்து விட்டது. அதை வெளியே இழுக்க அதன் குடும்ப உறுப்பினர்களான பிற யானைகள் மிக சிறப்பான முயற்சியில் ஈடுபட்ட போதும், அவற்றால் அந்த குட்டியை வெளியே கொண்டு வர முடியவில்லை. சிறிது நேரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கையில் இறங்கியது.




முழு செயல்பாடும் கேமராவில் பதிவானது. இன்ஸ்டாவில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த 2 வீடியோக்கள் சிறிய பகுதி தான். எங்கள் வெப்சைட்டில் இது தொடர்பான முழு வீடியோ இருக்கிறது என்று கூறி உள்ளது. ஒரு வீடியோவில் அந்த யானை குட்டி, சிறிய தண்ணீர்த் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் போராடுவதும், மற்ற யானைகள் அதை வெளியே இழுக்க முயற்சிப்பதும் பதிவாகி இருக்கிறது.

Also read... 1000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தது ஆணா, பெண்ணா? குழப்பத்திற்கு கிடைத்த விடை!

மற்றொரு வீடியோவில் இரு காவலர்கள் கணுக்கால் அளவே தண்ணீர் இருக்கும் தொட்டியில் இறங்கி யானை குட்டியை கைகளால் தூக்கி வெளியே விடுவது பதிவாகி இருக்கிறது. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள், வீரர்கள் அந்த யானை குட்டியை வெளியே தூக்கி விட்டதும் அது ஓடும் அழகை பாருங்கள். உங்களுக்கும் புன்னகை வரும், உங்கள் இதயத்திலும் இந்த மீட்பு வீடியோ இடம்பிடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: