திருமணம் ஆகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்

தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி, தந்தைக்கு உத்தரவிடக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Web Desk | news18
Updated: June 24, 2019, 8:58 PM IST
திருமணம் ஆகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
.
Web Desk | news18
Updated: June 24, 2019, 8:58 PM IST
திருமணம் ஆகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி, தந்தைக்கு உத்தரவிடக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதால், ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அந்த பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, 18 வயது கடந்த திருமணம் ஆகாத பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது எனக் கூறி, குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...