உபியில் நடந்த இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்திகளின்படி, உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள சாபியா உம்ராவ் கிராமத்தில் வசிப்பவர் கைலாஷ் யாதவ். பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கைலாஷ் யாதவின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரது மூன்றாவது மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணமான சிறிது காலத்திலேயே பூஜாவின் கணவன் இறந்துவிட அவருக்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். ஆனால் அந்த குடும்பம் பிடிக்கவில்லை என்று கூறி முதல் கணவன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் பூஜா. கணவர் இல்லாத வீட்டில் தனிமையை உணர்ந்த பூஜா, மாமனாரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், இரு குடும்பத்தார் முன்னிலையில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்து அப்பகுதி முழுவதும் விவாதம் நடந்து வருகிறது.
அதன் பின்னர் இந்த திருமணத்தின் படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து விஷயம் காவல்துறை கவனத்திற்கு சென்றது. பர்ஹல்கஞ்ச் காவல் துறை பொறுப்பு காவலர் கூறுகையில், வைரலாகி வரும் புகைப்படத்தில் தான் இந்த திருமணம் குறித்து எங்களுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. இது இரண்டு நபர்களுக்கு இடையிலான பரஸ்பர விவகாரம் என்றும், யாருக்கேனும் புகார் இருந்தால் காவல்துறை விசாரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Uttar pradesh, Viral News