நேற்று தந்தையர் தின கொண்டாட்டங்களை எல்லா ஊடகங்களின் வழியாக நாம் பார்த்திருப்போம். முன்பெல்லாம் நாம் அன்னையர் தினத்தை பெரிய அளவில் கொண்டாடி வந்தோம். அதே போன்று சமீப காலமாக தந்தையர் தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். தந்தையர் தினம் என்றதும் எல்லோரும் தங்களது அப்பாவை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று பல விஷயங்களை முயற்சி செய்திருப்போம்.
ஒரு மகன்/மகள் தனது அப்பாவை மகிழ்ச்சிப்படுத்த பெரிய அளவில் ஏதேதோ செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. பல அப்பாக்கள் ஆசைப்படுவது, தான் பெற்ற பிள்ளை நன்றாக படித்து அவர்களுக்கு பிடித்த துறையில் முன்னேறி நல்ல வேலையில் பணி செய்வதுதான். பெரும்பாலான அப்பாக்களுக்கு இதுதான் உயரிய கனவாக இருக்கிறது. தந்தையர் தினத்தில் நாம் கொடுக்கும் பரிசுகளை விடவும், இவற்றைதான் அப்பாக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் அப்பா எதிர்பார்க்கும் விஷயத்தை நீங்கள் செய்து விட்டால், அதை விட இந்த உலகில் பெரிய ஒன்று எதுவுமில்லை. இப்படியொரு மன நிறைவான செயலை தான் ஒரு மகன் தனது அப்பாவை சந்தோஷப்படுத்தும் விதமாக செய்துள்ளார். இந்த மகன், பயண டிக்கெட் பரிசோதகராக (TTE) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். இதே இரயில்வே துறையில்தான் இவரது அப்பாவும் பணிபுரிந்து வருகிறார். இவரது அப்பா இரயில்வே காவலராக பணிபுரிந்து வருகிறார். தந்தை மற்றும் மகன் இருவரும் இரண்டு வெவ்வேறு ரயில்களில் பணி செய்து வருகின்றனர்.
இவர்கள் பணி செய்த இரயில்கள் ஒரே இடத்தில் வெவ்வேறு இரயில் பாதையில் சந்தித்து கொண்டது. அப்போது இவர்கள் இருவரும் சில அடி இடைவெளியில் இருந்தனர். அந்த நேரத்தில் ஒரு ரயிலில் பணியில் இருந்த மகன், மற்றொரு ரயிலில் பணியில் இருந்த தந்தையுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். இந்த செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அத்துடன் இதை பலரும் தங்களது சமூக ஊடக அக்கவுண்ட்களில் பகிர்ந்தும் வருகின்றனர். மேலும், பலரும் இந்த அறிய வகை செல்பி படத்தை பார்த்து வியப்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Best selfie ever seen.. https://t.co/vneXs1JJAh
— Vanita Vivek Narayane (@VanitaNarayane) June 16, 2022
அதில் ஒருவர், "அற்புதமான செல்ஃபி. அப்பா ரயில்வேயில் காவலராக இருக்கிறார், மகன் டிடிஇ ஆக உள்ளார். இரண்டு ரயில்களும் அருகருகே சென்றபோது, இப்படியொரு அழகான செல்பி எடுக்க பெற்றது" என்று கூறியுள்ளார். இன்னொருவர்," இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்" என்று கமெண்ட் செய்துள்ளார். மூன்றாவதாக ஒருவர் "இதுவரை நான் பார்த்ததிலேயே பெஸ்ட் செல்பி இதுதான். சூப்பர் டைமிங்" என்று குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.
இந்த மாதிரியான புகைப்படம்தான் தந்தையர் தினத்தின் சிறந்த தருணமாக இருக்கும். இந்த படத்தில் உள்ள தந்தைக்கு இது எந்த அளவிற்கு பெருமையான விஷயமாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். மகன் இது போன்று சிறந்த விளங்குவதே அப்பாக்களுக்கு ஏற்ற சிறந்த பரிசாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.