4.25 கிலோ எடை கொண்ட மாம்பழத்தை வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த விவசாய தம்பதியினர்!

4.25 கிலோ எடை கொண்ட மாம்பழத்தை வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த விவசாய தம்பதியினர்!

உலக சாதனையில் இடம்பிடித்த விவசாய தம்பதியினர்

கணவன், மனைவி இருவரும் உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோடைகாலத்தில் பல பகுதிகளில் மாம்பழ சீசன் துவங்கிய அதேசமயத்தில், விவசாயம் செய்து வரும் கொலம்பிய தம்பதி மாம்பழ ஆர்வலர்களுக்கு ஒரு மிகப்பெரிய மேங்கோ ஆச்சர்யத்தை கொடுத்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் வளர்க்கும் மாமரத்தின் மூலம் கிடைத்த ஒரு மாம்பழத்தின் எடை 4.25 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் குயாட்டா எனும் பகுதியில் வசித்து வரும் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் ஆகியோரால் வளர்க்கப்பட்ட இந்த பிரமாண்டமான பழம், போயாகா பகுதியில் உள்ள சான் மார்டினில், ஏப்ரல் 29 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஒரு இடத்தைப் பிடித்தது.

இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 3.435 கிலோ எடையுள்ள ஒரு மாம்பழத்தின் சாதனையை இவர்களின் மாம்பழம் முறியடித்துள்ளது. மேலும் உலக சாதனையில் இடம்பெற்றதை அடுத்து ஜெர்மன் கூறியதாவது, இந்த பட்டத்தை வெல்வதன் மூலம், கொலம்பியாவில் உள்ள மக்கள் “கிராமப்புறங்களை நேசிக்கும் தாழ்மையான, கடின உழைப்பாளிகள்” என்பதை உலகிற்கு காண்பிப்பதே எங்களின் குறிக்கோள் என்று கூறினார். அன்புடன் பயிரிடப்பட்ட நிலத்திலிருந்து எங்களுக்கு பெரிய பலன்கள் கிடைத்துள்ளது. மேலும் உலக நாடுகள் தொற்றுநோய் பிடியில் சிக்கி இருக்கும் சமயத்தில், இந்த பெரிய பழம் எங்கள் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் செய்தியை கொண்டு வந்துள்ளதாக ஜெர்மன் மேலும் கூறியுள்ளார்.இந்த சாதனை குறித்து கின்னஸ் உலக சாதனைகளுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் குறிப்பிட்டுள்ளதாவது, ஜேர்மனின் மகள் அவர்கள் வளர்த்த மாம்பழத்தின் கனமான அளவைக் கண்டபின் உலக பதிவுகளுக்காக இணையத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார். மேலும் இணையத்தில் கிடைத்த தகவல்களை சேகரித்த பின்னர், அவர்களின் மாம்பழத்தை எடைபோட்டு பார்த்துள்ளனர். அதில் ஏற்கனவே உலக சாதனை படைத்த மாம்பழங்களை விட அவர்களின் மாம்பழமே உலகிலேயே கனமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Also read... போலி ரெமிடிசிவிர் மருந்து - டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

அதன்பின்பு இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னஸ் உலக சாதனைக்கு ஜெர்மன் கூறியதாவது, " இந்த விருது குயாதுனோ கிராமப்புறங்களின் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இயற்கையின் மீதான அன்பு ஆகியவற்றை எங்கள் பெற்றோர் எங்களுக்கு வழங்கியதை அங்கீகரிக்கிறது" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களின் சாதனையை கொண்டாடும் விதமாக மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்த முழு மாம்பழத்தையும் எங்கள் குடும்பம் உறுப்பினர்கள் பகிர்ந்து சாப்பிட்டார்கள் என்று ஜெர்மன் கூறியுள்ளார். சாதனையை நினைவுக்கூரும் வகையில் அதேபோன்று மற்றொரு மாம்பழத்தை உருவாக்கி, குயாட்டாவில் வரலாற்றை பதிவு செய்ய உதவிய நகராட்சிக்கு ஜெர்மன் நன்கொடை அளித்துள்ளார்.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, இது 2014 ஆம் ஆண்டைப் போலவே அவர்களின் நகராட்சியால் கைப்பற்றப்பட்ட இரண்டாவது கின்னஸ் உலக சாதனை ஆகும். முன்னதாக 2014ம் ஆண்டு 3,1999 சதுர மீட்டரில் மிக நீளமான இயற்கை மலர் கம்பளத்திற்கான உலக சாதனையை குயாட்டா பகுதி முறியடித்தது. விவசாயத்திற்கு பிரபலமான குயாட்டா பாகு மக்கள், காபி, அரேபாஸ், மொகோலாஸ் மற்றும் மாம்பழங்களை குடும்ப நுகர்வுக்காகவும் வணிகத்திற்காகவும் வளர்த்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: