ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பிளம்பிங் முதல் தூதரக பணி வரை... கைலாசாவிற்கு ஆட்கள் தேவை... நித்தி அடுத்த அதிரடி..!

பிளம்பிங் முதல் தூதரக பணி வரை... கைலாசாவிற்கு ஆட்கள் தேவை... நித்தி அடுத்த அதிரடி..!

நித்தியானந்தா

நித்தியானந்தா

பணியில் சேர்வோருக்கு ஊதியத்துடன் பயிற்சிக்கொடுக்கப்பட்டு நித்தியின் பல்வேறு ஆசிரமங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  கைலாசா என்ற தனி தேசம் கண்டுவிட்டதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா தனது நாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று புதிய அறிவிப்பை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

  சர்ச்சையில் சிக்குவது ஏதோ சீடை சாப்பிடுவது போன்று நாளுக்கு ஒரு சர்ச்சையில் சிக்கிவந்த சாமியார் நித்தியானந்தா சில நாட்களாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது குபீர் அறிவிப்பை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்

  நித்தியின் திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

  ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. பெண் சீடர்கள் மட்டும் இல்லாமல் சில ஆண் சீடர்களும் சாமியார் நித்திய மீது பாலியல் குற்றச்சாட்டும் ,மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

  இந்தியாவில் பல வழக்குகளில் சிக்கியவர் இனியும் இந்தியாவில் இருந்தோம் சிறை வாழ்வே நிரந்தரம் ஆகிவிடும் என்று, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது சில சீடர்களுடன் தலைமறைவானார்.

  ஆனாலும் அடங்காத நித்தி எங்கோ பதிங்கியிருந்து கிராப்பிக்ஸ் லீலைகளை செய்து தகதகவென பேக்ரவுண்ட் செட்டப்புகளை செட்டிங்குகளை செய்து யூடியூப் நேரலைகளை பேசிவந்தார்.

  இந்தியாவில் இனி நம் வேலை ஆகாது என்று முடிவு கட்டியவர் வெளிநாடுகளை குறிவைத்து தனது லீலைகளை அரங்கேற்றினார்.

  இந்நிலையில் தான் இந்தியாவை விட்டு தான் சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தி அறிவித்தார். மேலும் கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்தார்.

  கைலாசா நாட்டின் அதிபராக தான் இருப்பதாக கூறியவர் ,நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார்.

  இதற்கு ஒருபடி மேலே சென்று கைலைசா நாட்டிற்காக தனி வங்கி,தனி காசு என்று விடாத உருட்டுகளே இல்லை. ஆனால் அந்த நாடு எங்கு உள்ளது , எப்படி உள்ளது என்ற எந்த தகவலையும் இதுவரை பொதுவெளியில் கூறியதே இல்லை.

  இப்படி பிலே விட்டும் பில்ட்ப் கொடுத்தும் யூடியூப் பிரபலங்களுடன் போட்டிப்போட்டு வந்த நித்தியானந்தாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் எதோ ஒரு தீவில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தா எந்த நாட்டிற்கும் விமானத்தில் செல்ல முடியாத அளவு லுக் அவுட் நோட்டீஸ் உள்ளது.

  இதையும் வாசிக்க: ரேஷன் அட்டைக்கு ₹1000... மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த சீர்காழி வட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

  இதனால் சிகிச்சைக்காக எங்கும் செல்ல முடியாதவர் இலங்கையிடம் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியானது. இதனால் கடந்த ஒராண்டாகவே நித்தி பற்றி வைரல் செய்திகள் எதுவும் உலா வராமல் இருந்தது.

  இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள நித்தியின் ஆசிரமங்களில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை என்று ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. எலட்ரானிக் , பிளம்மிங் பணிகளுக்கும், தூதரக பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

  இதையும்  வாசிக்ககட்டாய மாதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது - உச்சநீதிமன்றம் கருத்து

  பணியில் சேர்வோருக்கு ஊதியத்துடன் பயிற்சிக்கொடுக்கப்பட்டு நித்தியின் பல்வேறு ஆசிரமங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

  ஏற்கனவே நித்தியிடம் பல்வேறு வகையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர்கள் இதை பார்த்து மேலும் அதிர்ச்சியில் உள்ளனர். அத்துடன் கைலாசாவின் அதிபர் கல்லாகட்ட புதிய திட்டத்தை அவிழ்த்துவிட்டுள்ளாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Nithyananda