முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பொம்மை காரில் ஊர்வலம், அமர்க்களமான விருந்து... ஊரே வியக்க நாய்களுக்கு நடந்த திருமணம்..!

பொம்மை காரில் ஊர்வலம், அமர்க்களமான விருந்து... ஊரே வியக்க நாய்களுக்கு நடந்த திருமணம்..!

நாய்களுக்கு நடத்தப்பட்ட திருமணம்

நாய்களுக்கு நடத்தப்பட்ட திருமணம்

நாய்களுக்குத் திருமண செய்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

செல்ல பிராணிகளுக்கு நம் மனதில் எப்போது தனி இடம் இருப்பது உண்டு. செல்ல பிராணிகளை குடும்பங்களில் ஒருவராகவே நடத்துவார்கள். அப்படி ஒரு குடும்பம் தனது நாய்களுக்கு இந்திய முறைப்படி திருமண செய்து வைத்துள்ளனர். அதும் சில ஆயிரங்களைச் செலவு செய்து திருமணத்தைக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ரியோ மற்றும் ரியா என்று இரண்டு நாய்களை அவர்களின் குடும்பத்தார்கள் இணைந்து உண்மையான திருமணத்தை நடத்திவைத்துள்ளனர். அந்த வீடியோவில், திருமணம் நடைபெறும் இடத்திற்கு ரியோ ஒரு சிறிய ரோபோ காரில் அழைத்து வரப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ரியாவிற்கு திருமணம் ஆடை அணிவித்து இருவரும் மண மேடையில் அமரவைக்கப்படுகின்றனர். மேலும் இருவரின் வீட்டார்களும் இணைந்து மாலை மாற்றி திருமணம் செய்து வைக்கின்றனர்.

Also Read : ஒரே ஒரு ரயில் பாதைக்காக பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்தும் இந்திய அரசு... ஏன் தெரியுமா?

இரு குடும்ப உறுப்பினர்களும் ஆடல் பாடலுடன் நாய்களுக்கு ஆசீர்வாதங்களை அள்ளி கொடுக்க திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் கல்யாண சாப்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் வியப்புடன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Dog, Trending Video, Viral Video