முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 'வாக்காளருக்குப் பணம் கொடுத்தாரா முதல்வர்?’- வைரலாகப் பரவிய வீடியோ காட்சி உண்மையா?

'வாக்காளருக்குப் பணம் கொடுத்தாரா முதல்வர்?’- வைரலாகப் பரவிய வீடியோ காட்சி உண்மையா?

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

#FakeVSFact | பணம் மட்டும் வாங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவியது. ஓட்டுக்காக முதல்வர் பணம் கொடுக்கிறார் என்ற தகவலும் பரவியது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்குப் பணம் கொடுப்பது போன்ற வீடியோ இன்று காலையிலிருந்து வைரலாகி வருகிறது. 

மக்களவைத் தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது சந்தைப் பகுதி ஒன்றின் வழியாக வாக்குச் சேகரித்தபடி சென்ற முதல்வர், வாழை வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடம் வாக்கு கேட்டார். தன்னிடம் ஓட்டு கேட்ட முதல்வருக்குத் தன் கடையிலிருந்து வாழை சீப் ஒன்றை எடுத்து வழங்கினார் அந்த பெண். முதலில் அதை மறுத்த முதல்வர் பின்னர் அந்த வாழை சீப்பை காசு கொடுத்து வாங்கிக்கொண்டார்.

ஆனால், பணம் மட்டும் வாங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவியது. ஓட்டுக்காக முதல்வர் பணம் கொடுக்கிறார் என்ற தகவலும் பரவியது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள முழு வீடியோ முன்னர் வெளியான செய்தியை போலி என்று நிரூபணம் செய்துள்ளது.

இதனிடையே நியூஸ்18-க்கு பிரத்யேக பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, அந்த பழத்திற்குதான் பணம் கொடுத்ததாக விளக்கம் அளித்தார்.

மேலும் பார்க்க: பிரசாரத்தின் போது சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய முதல்வர்!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Cm edappadi palanisamy, Elections 2019, Fake News, Lok Sabha Election 2019, Salem S22p15, Tamil Nadu Lok Sabha Elections 2019, Trending