ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பூமிக்கு வர காசுஇல்லை.. ஜப்பான் பாட்டிக்கு காதல் வலை - 24 லட்சத்தை சுருட்டிய போலி விண்வெளி வீரர்

பூமிக்கு வர காசுஇல்லை.. ஜப்பான் பாட்டிக்கு காதல் வலை - 24 லட்சத்தை சுருட்டிய போலி விண்வெளி வீரர்

போலி விண்வெளி வீரர்

போலி விண்வெளி வீரர்

பூமிக்கு திரும்ப ராக்கெட் மற்றும் பயண செலவுகளுக்கு பணம் இல்லாததால் அங்கேயே இருப்பதாகவும், பூமியில் தரையிறங்கியவுடன் 65 வயதான ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai |

  காதல் வார்த்தைகள் சொல்லி கல்யாண ஆசை காட்டி பணம் பறித்து மோசடி செய்யும் பல கதைகளை கேட்டிருப்போம். அதற்காக தனது குடும்ப சூழல் , செய்யும் வேலையை மாற்றிக் கூறுவார்கள். அப்படி சொல்லும் ஒரு பொய் விண்வெளி வரை இருக்கும் என்றும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்

  பண மோசடி செய்பவர் ஒருவர் தான் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர். பூமிக்கு திரும்பி வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு ஜப்பானின் 65 வயது பாட்டியை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் தொடங்கியுள்ளது. ஒரு நபர் தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிவதாகவும், செல்போன்களுக்கு குறைந்த அணுகல் இருப்பதாகவும் கூறி விண்வெளியின் சீரற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பக்கத்தில் இருந்து பலருக்கு செய்தி அனுப்பி வலையை விரித்துள்ளார். அதில் சிக்கியது ஒரு 65 வயது பாட்டி.

  கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

  தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதாகவும், பூமிக்கு திரும்பி வர தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். பூமிக்கு திரும்ப ராக்கெட் மற்றும் பயண செலவுகளுக்கு பணம் இல்லாததால் அங்கேயே இருப்பதாக தெரிவித்துள்ளார். அதையும் அந்த பாட்டி நம்பியுள்ளார். அதோடு மட்டுமின்றி பூமியில் தரையிறங்கியவுடன் 65 வயதான ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

  ஜப்பானிய செய்தியிடல் செயலியான LINE இல் இருவரும் பரிமாறிக்கொண்ட பல உரைகளில் “இதை 1,000 முறை சொன்னால் போதாது, ஆனால் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். அவர் ஜப்பானில் தனது வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகவும் அதற்காக பூமிக்கு வர பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

  ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 5 வரையான காலத்தில் பாதிக்கப்பட்ட அனிகா பாட்டி மோசடி செய்தவருக்கு ஐந்து தவணைகளில் சுமார் $30,000 (ரூ. 24,69,891) செலுத்தியதாக ஜப்பானிய செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கோரிக்கைகள் வரவே பாட்டிக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. போலீசில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கு காதல் மோசடியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் காதல் மோசடிகள் அதிகரித்து வருவதாக ஒரு செய்தி அறிக்கை கூறியுள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Japan, Scam