பெண்ணின் உடலை இழுத்து சென்ற முதலை.. பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சி... உண்மை என்ன?

முதலை

பலர் இந்த சம்பவம் மும்பையில் உள்ள போவாயில் நடந்திருக்கலாம் என்று கூறினர். மேலும் சிலர் மத்தியபிரதேசத்தின் கோலார் அணையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறிவந்தனர்.

  • Share this:
முதலைகள் உயிரைக் கொல்லும் ஒரு பயங்கர விலங்காகும். இவை நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய உயிரினம். நிலத்தில் இருப்பதை விட நீரில் இதன் வேட்டையாடும் திறன் பலமடங்கு அதிகம். மேலும் ஆபத்து நிறைந்த இந்த உயிரினம் மனிதர்கள் வேட்டையாடும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் தான் முதலைகள் நடமாடும் ஏரி பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், கிராமப்பகுதிகளில் உள்ள ஆறு, ஏரி போன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பல பகுதிகளில் முதலையால் பலர் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், முதலை ஒன்று பெண்ணின் உடலை தண்ணீருக்கடியில் இழுத்து சென்ற வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த பெண் இறந்த நிலையியல் இருப்பதும் வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வடமாநிலங்களில் சில செய்தி ஊடகம் இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டன. ஆனால் அந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பதை தெரிவிக்கவில்லை. மேலும் இந்த வீடியோ ட்விட்டரிலும் வெளியிடப்பட்டுள்ளது. எங்கு நடந்தது என்பது தெரியாததால் பலர் இந்த சம்பவம் இந்தியாவில் நடந்திருக்கலாம் என்று தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானின் டோங்கில் நடந்ததாக கூறி, இறந்த பெண்ணை வாயில் சுமந்து செல்லும் முதலை வீடியோ வேறு சில பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.சுற்றுலா சென்ற அந்த பெண் பிச்பூர் அணையில் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அப்போது இந்த பெண் முதலையிடம் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மேலும், பலர் இந்த சம்பவம் மும்பையில் உள்ள போவாயில் நடந்திருக்கலாம் என்று கூறினர். மேலும் சிலர் மத்தியபிரதேசத்தின் கோலார் அணையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறிவந்தனர்.

இந்த கூற்றுகள் ஃபேஸ்புக்கிலும் பரவி வந்தன.

உண்மை என்ன?

இந்த நிலையில், சம்பவம் உண்மையில் எங்கு நடந்திருக்கும் என்று தேடி பார்த்ததில், ஜூன் 21ம் தேதி அன்று மெக்ஸிகோவில் லகுனா டெல் கார்பின்டெரோ டம்பிகோவில் இந்த சம்பவம் நடந்ததாக ஒரு வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது.


அதேபோல இந்த சம்பவத்தை மெக்சிகன் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. மெக்ஸிகோ டெய்லி போஸ்ட் பத்திரிகையின் படி, அந்த பெண் லகுனா டெல் கார்பின்டெரோவின் கரையின் ஓரமாக துணிகளை துவைத்துக் கொண்டிருந்தபோது, முதலையால் கொல்லப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இறுதியில் முதலை தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்டது.பெண் சடலத்தின் மீட்பு செயல்பாட்டின் வீடியோவையும் மெக்சிகன் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.

இதன் மூலம், இறந்த பெண்ணின் உடலை முதலை வாயில் சுமந்து செல்லும் வீடியோ இந்தியாவில் நடந்ததாக கூறப்படும் பொய்யான கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Published by:Yuvaraj V
First published: