Home /News /trend /

Fact Check :கேரளாவில் வைரலாகும் இளம்பெண் பாலியல் துன்புறத்தல் வீடியோவின் உண்மை நிலை

Fact Check :கேரளாவில் வைரலாகும் இளம்பெண் பாலியல் துன்புறத்தல் வீடியோவின் உண்மை நிலை

கேரளாவில் இந்து பெண் ஒருவர் பாலியல் துன்புறத்தல் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறத்தல் செய்யப்படும் இந்த வீடியோவில் புதர் ஒன்றில் சிலர் அவரது ஆடைகளை கழற்ற முயற்சி செய்கின்றனர். அந்த பெண் உடன் வந்த தோழி இதை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து பாலியல் துன்புறதலுக்கு ஆளாக்கப்படுகிறார்.

    கேரளாவில் இந்துக்கள் சிறுபான்மையினர் என்பதால் இதுப்போன்ற துன்புறத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்று இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டது. மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் கேரளாவில் வழக்கமானவை என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் கேரளாவில் இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் இந்த வீடியோ குறித்து தேடிப்பார்த்ததில் அந்த வீடியோ பழையது என்பது தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ. ஆந்திராவின் பிரகாசம் என்ற மாவட்டத்தில் ஆண் நண்பர்களால் பெண் பாலியல் துன்புறத்தல் செய்யப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான செய்தியை ஆந்திராவில் இயங்கும் டிவி9 செய்தி தொலைக்காட்சி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.



    பாலியல் துன்புறத்தல் செய்த இளைஞர்கள் வீடியோ வெளியான சில நாட்களில் கைது செய்யப்ட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வீடியோவை ஒருவர் ட்விட்டரில் கடந்த 7-ம் தேதி, கேரளாவில் இந்துகள், சிறுபான்மையினர் என்பதால் இதுப்போன்ற துன்புறதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவம் அங்கு வழக்கமாக நடைபெற்று வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோவின் உண்மைதன்மை அறியாமல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ஆகியோர் இதனை ரீ-ட்விட் செய்துள்ளனர். இந்த வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியதால் அது ட்விட்டரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.



    இணையம் மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் செய்தி மற்றும் வீடியோவின் உண்மைத்தன்மை தெரியாமல் அதனை பகிர்வது சட்டப்படி குற்றமாகும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Fact Check, Viral Video

    அடுத்த செய்தி