Home /News /trend /

Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?

Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல் அலட்சியமாக அடக்கம் செய்யப்படுவதாக பல நாடுகளில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசுவதாக ஒரு வீடியோ வைரலானது. 18 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோவில் கொத்து கொத்தாக உடல்கள் வீசப்படுவது போன்ற காட்சிகள் இருந்தது.



    இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க அந்த வீடியோவின் உண்மைத்தன்மை தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ 2018-ம் ஆண்டு வெளியான ஒன்றாகும்.வான்வெளி சாகசம் செய்ய முற்படும் போது எடுக்கப்பட்டது.

    கொரோனா காலக்கட்டத்தில் நம்பகதன்மை இல்லாத எந்த செய்தியும் பரப்ப வேண்டாம் என்று அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி போலி வீடியோ மற்றும் செய்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: CoronaVirus, Viral

    அடுத்த செய்தி