#FactCheck | 'இந்தி தெரியாது போடா' வைரலாகும் ஜஸ்டின் ட்ரூடோ மீம்ஸ்! உண்மை என்ன?

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட் தனது கையில் பிடித்திருந்தவாறு மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

#FactCheck | 'இந்தி தெரியாது போடா' வைரலாகும் ஜஸ்டின் ட்ரூடோ மீம்ஸ்! உண்மை என்ன?
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட் தனது கையில் பிடித்திருந்தவாறு மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 11:19 AM IST
  • Share this:
கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் தீவிரமாக எழுந்துவருகின்றன. சென்னை விமான நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி, ‘இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா’ என்று கேள்வி எழுப்பியவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில், ‘இந்தி தெரியாததால் தமிழக மருத்துவர்களை வெளியேறச் சொன்ன சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ‘காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.




மத்திய அரசு ஹிந்தியைத் திணித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் தமிழ் திரைப் பிரபலங்கள் ஹிந்தி தெரியாது போடா மற்றும் தமிழ் பேசும் இந்தியன் போன்ற டி-சார்ட்டுகள் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இணையத்தில்  வைரலானது. இந்த டி-சர்ட் கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் பலரும் இத்தகைய ஆடைகளை அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட் தனது கையில் பிடித்திருந்தவாறு மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த மீம் போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பு மருந்து குறித்து Vaccines are safe, and save lives. Love this shirt, thanks என்ற வாசகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் மே May 30, 2019-ஆம் ஆண்டு பதிவிட்ட புகைப்படம் இது.



இதனை எடிட் செய்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன் என அவர் பெயரில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading