Orkut Twitter Trending : நியாபகம் வருதே..நியாபகம் வருதே ... 80ஸ் கிட்களின் முதல் சோசியல் மீடியா ஆர்குட் - நினைவுகூரும் நெட்டிசன்ஸ்!

ஆர்க்குட்

தற்போது 80ஸ் கிட்களின் முதல் சோசியல் மீடியாவான ஆர்குட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

  • Share this:
    2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்குட் செப்டம்பர் 30 2014ம் ஆண்டு மூடு விழா கண்டது. ஆர்குட் 80ஸ் கிட்களின் முதல் சோசியல் மீடியா. இதனிடையே தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் தடை செய்யப்படலாம் என்ற தகவலால், ஆர்குட்டை நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    ஆர்க்குட் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் சமூக வலையமைப்பு சேவையாகும். இச்சேவை இதனைத் தொடங்கிய கூகிள் ஊழியர் ஆர்க்குட் புயுக்கோக்டன் என்பவருடைய பெயராலேயே ஆர்க்குட் என வழங்குகின்றது. புதிய நட்புறவை வளர்ப்பதோடு இருக்கின்ற நண்பர்களின் தொடர்பையும் நட்புறவையும் பேணிப் பாதுகாக்கின்றது.

    சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவதூறு செய்தியை முதலில் பரப்பும் நபரை கண்டறிந்து, அவரை பற்றிய தகவல்களை நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்விதிகளை பின்பற்ற மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.

    ALSO READ |  குக்கூ குக்கூ... ட்விட்டர் போச்சா... வாழ்த்து சொல்லும் பௌத்தர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

    இந்நிலையில், புதிய கட்டுப்பாட்டு விதிகளை ஏற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். எனினும், புதிய விதிகளை சமூக வலைதள நிறுவனங்கள், இன்னும் ஏற்றதாக தெரியவில்லை.

     

     



     

     



     

     



     

     

    இதனால் இந்தியாவில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம், மத்திய அரசின் விதிகளுக்கு இணங்குவதை தாங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாகவும், ஆனால் அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

     

     



     

     



    இதனிடையே ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை தீடீரென தடை செய்யப்படும் என்ற செய்தி கேட்டு இணையவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இது தொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளன. தற்போது 80ஸ் கிட்களின் முதல் சோசியல் மீடியாவான ஆர்குட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. கூகுளின் சேவைகளில் ஒன்றான ஆர்குட் 2014ல் நிறுத்தப்பட்டது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: