முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விண்வெளியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 75ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தி!

விண்வெளியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 75ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தி!

Samantha Cristoforetti

Samantha Cristoforetti

wishes from space: நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் பிற அனைத்து ஏஜென்சிகளின் சார்பாக, ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ செயல்பட்டு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • Last Updated :

இந்தியா சுதந்திரம் அடைந்ததன்  75 வது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், ​​உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், ஒரு வாழ்த்து விண்வெளியில் இருந்து வந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி(Samantha Cristoforetti), இந்த வரலாற்று தருணத்தில் விண்வெளியில் இருந்து இந்திய நாட்டுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பல தசாப்தங்களாக நாசா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) பல விண்வெளி மற்றும் அறிவியல் பணிகளில் சர்வதேச நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருவதாகவும் விண்வெளி வீரர் வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ உருவாக்கி வரும் இரண்டு பெரிய திட்டங்களைப் பற்றி பேசிய சமந்தா, " நிசார் புவி அறிவியல் இயக்கத்தின் ஆராய்ச்சியில் இஸ்ரோவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது பேரழிவுகளைக் கண்காணிக்க உதவுவதோடு மாறிவரும் காலநிலையை நன்கு புரிந்துகொள்ள உதவும்"என்றார்.

Nasa Isro SAR Mission (NISAR) ஆனது இந்திய மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனங்களால் இணைந்து உலகளாவிய பேரழிவுகளைக் கண்காணிக்கவும், சேதங்களைத் தணிக்கவும், மதிப்பிட உதவுவதற்கும், குறுகிய கால இடைவெளியில் பேரழிவுகளுக்கு முன்னும் பின்னும் அவதானிப்புகளுடன் தரவுகளை வழங்கவும் உருவாக்கப்படுகிறது. விண்கலம் கிரகத்தின் மேற்பரப்பு இயக்கங்களைக் கண்டறியும் செயல்முறைகளை விளக்க உதவும்.

செயற்கை துளை ரேடார் (SAR) என்பது தெளிவுத்திறன்-வரையறுக்கப்பட்ட ரேடார் அமைப்பிலிருந்து சிறந்த தெளிவுத்திறன் படங்களை உருவாக்குவதற்கான ஒரு நுட்பத்தைக் குறிக்கிறது. NISAR விண்கலம் இரண்டு முழு திறன் கொண்ட செயற்கை துளை ரேடார் கருவிகளுக்கு இடமளிக்கும்: நாசாவின் 24 செமீ அலைநீளம் L-பேண்ட் செயற்கை துளை ரேடார் (L-SAR) மற்றும் ISRO வழங்கிய 10 செமீ அலைநீளம் S-பேண்ட் செயற்கை துளை ரேடார் (S-SAR).

கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

மேலும், இத்தாலிய விண்வெளி வீரர் "நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் பிற அனைத்து ஏஜென்சிகளின் சார்பாக, ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ செயல்பட்டு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

ககன்யான் திட்ட அளவுருக்களை இந்தியா சோதிக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது. இஸ்ரோ இந்த வார தொடக்கத்தில் லோ ஆல்டிட்யூட் எஸ்கேப் மோட்டாரை சோதித்தது, இது க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தை இயக்கும். இஸ்ரோ முதல் மனிதர்கள் கொண்டுசெல்லும் சுற்றுப்பாதை விமானத்திற்கு முன் இரண்டு ஆளில்லா மிஷன்களை சோதனை செய்யும்.

top videos

    மேலும், இஸ்ரோவுடனான கூட்டாண்மையை விரிவுபடுத்துவதும், பிரபஞ்சத்தை ஒன்றாக இணைந்து ஆராய்வதும் நம் அனைவருக்கும் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான இலக்காகும் என்று அவர் கூறினார்.

    First published:

    Tags: Gaganyan, Independence day, ISRO, NASA, Space