முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பரோட்டா மாஸ்டர்களை உருவாக்க பிரத்யேக பயிற்சி மையம்!

பரோட்டா மாஸ்டர்களை உருவாக்க பிரத்யேக பயிற்சி மையம்!

பரோட்டா மாஸ்டர்களை உருவாக்க பிரத்யேக பயிற்சி மையம்!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பதை தாண்டி நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாகிவிட்டது பரோட்டா... அசைவ பிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்... விதவிதமான பரோட்டாக்களை செய்வது மதுரை மாஸ்டர்களுக்கு கைவந்த கலை. அதை சாப்பிடவே அதிகளவில் பொதுமக்களும் கடைகளுக்கு விரும்பிச் செல்வதால் மதுரை மாநகரின் திரும்பிய திசையெல்லாம் பரோட்டா கடைகளை பார்க்க முடிகிறது.

கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்குகின்றனர். சிலர் காலையில் ஒரு கடையிலும், மாலையில் ஒரு கடையிலும் என்று நாள் ஒன்றுக்கு 3000 ரூபாய் கூட சம்பாதித்து விடுகின்றனர். பலர் வெளிநாடுகளிலும் பரோட்டா போட்டு சம்பாதிக்கின்றனர்.

இப்படி பரோட்டா மாஸ்டர்களுக்கு உலகம் முழுவதும் கிராக்கி இருப்பதை உணர்ந்த மதுரையை சேர்ந்த முகமது காசிம், அவர்களுக்கென ஒரு பயிற்சி மையத்தையே தொடங்கியுள்ளார். மதுரை ஆனையூரில் செல்ஃபி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு தற்போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் சேர நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும் தனித்தனியாக 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 30 நாட்கள் தினமும் காலையும், மாலையும் பரோட்டா தயாரிக்க செய்முறை, செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

வேலை கிடைக்காத பட்டதாரிகள் பலரும், இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து நோட்டும், பேனாவுமாக பரோட்டா போடுவதற்கான குறிப்புகளை பெற்றுகின்றனர். இவர்களுக்கு மைதா மாவை தட்டி அதை வீசுவது தான் பிரதான பயிற்சியாக உள்ளது. சாதாரண பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகையான பரோட்டாக்கள் தயாரிக்கவும், சால்னா தயாரிக்கவும் இவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

முழுநேர பயிற்சி மைங்களாக பரோட்டா பயிற்சி மையங்கள் செயல்படுவதை பார்க்கும் போது அதன் மீதான தேவையை நம்மால் உணர முடிகிறது.

First published:

Tags: Parotta