• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ’மாம்பழ ஜூஸைக் கொடு, கண்ணாடியை எடுத்துக்கொள்’ குரங்கு செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ!

’மாம்பழ ஜூஸைக் கொடு, கண்ணாடியை எடுத்துக்கொள்’ குரங்கு செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ!

குரங்கு செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ

குரங்கு செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ

மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறார். ஆனால், அவருடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கண்ணாடி கிடைப்பது என்பது அவருக்கு, வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை என்கிற ரீதியில் குரங்கின் ரியாக்ஷன் இருக்கிறது.

  • Share this:
ட்விட்டிரில் வைரலாகியிருக்கும் வீடியோவில், குரங்கு ஒன்று முன்பே எடுத்து வைத்திருந்த கண்ணாடியை மாம்பழ ஜூஸ் கொடுத்தபிறகு, உரிமையாளரிடம் கொடுக்கும் வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

யானை, நாய், குரங்கு உள்ளிட்ட விலங்குகள் செய்யும் சேட்டைகள், எப்போதும் பொதுமக்களை மிகவும் கவர்ந்துவிடும். இப்போது ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வரும் வீடியோவில் குரங்கு செய்யும் சேட்டை காண்போரை மிகவும் கவரும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரின் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொள்ளும் குரங்கு, அதனை கொடுக்க மறுத்துக் கொண்டே இருக்கிறது. பின்னர் அவர் கையில் வைத்திருக்கும் மாம்பழ ஜூஸைக் கொடுத்த அடுத்த நொடியில் கண்ணாடியை தூக்கி அந்த இளைஞரிடம் வீசுகிறது. குரங்கின் சேட்டையான வீடியோ நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது.



இந்த வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் சர்மா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கிண்டலான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்த வீடியோவில் குரங்கு இரும்புக் கம்பியில் செய்யப்பட்ட கூண்டு ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறது. அதனுடன் மற்றொரு சின்ன குட்டி குரங்கும் உள்ளது. அவ்வழியாக சென்ற இளைஞரின் கண்ணாடி எடுத்து வைத்துக் கொள்ளும் குரங்கு, இளைஞர் போராடியும் அதனை கொடுக்க மறுக்கிறது.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறார். ஆனால், அவருடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கண்ணாடி கிடைப்பது என்பது அவருக்கு, வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை என்கிற ரீதியில் குரங்கின் ரியாக்ஷன் இருக்கிறது. இதனையடுத்து, என்ன செய்வதென யோசித்த அவர், கையில் இருக்கும் மாம்பழ ஜூஸை குரங்கிற்கு கொடுக்கிறார். அவர் அதனை நீட்டியதும் நொடிப்பொழுதில் வாங்கிக் கொள்ளும் குரங்கு, அடுத்த விநாடியே கண்ணாடியை இந்த இளைஞரை நோக்கி தூக்கி எறிகிறது.

குரங்கின் ஸ்மார்ட் ஆட்டியூட்டை ரசித்துள்ள ஐ.பி.எஸ் அதிகாரி ரூபன் சர்மாவும் அந்த வீடியோவை பகிர்ந்து கேப்சனில் "இந்த கையில கொடு, அந்த கையில எடுத்துக்கோ’ என பதிவிட்டு ஸ்மைல் சிமிலியையும் போட்டுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், இதேபோல் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

Also read... சாக்லேட் திமிங்கலைத்தை சாப்பிடுவீர்களா? வைரலாகும் 90 பவுண்டு எடையுள்ள சாக்லேட் திமிங்கலம்!

கிரண்குமார் என்பவர் பதிவிட்டுள்ள கமெண்டில், தனக்கு ஏற்பட்ட விநோத அனுபவம் பற்றி கூறியுள்ளார். ஒருமுறை சிம்லாவில் உள்ள ஜெகு கோவிலுக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த குரங்கு ஒன்று கிரண்குமாரின் கண்ணாடியை எடுத்துச் சென்றுள்ளது. அவரும் இந்த வீடியோவில் இருப்பதுபோல் கண்ணாடியை வாங்குவதற்கு போராடியுள்ளார்.

குரங்கிடம் நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக்காததால் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்து, கண்ணாடியை திரும்பப் பெற்றதாக தெரிவித்துள்ளார். இன்னும் சிலர், குரங்குகளின் புத்திசாலித்தனத்தை மிகவும் ரசிப்பதாகவும், நாய், பூனை, யானை உள்ளிட்ட ஒவ்வொரு விலங்குகளுக்கும் இருக்கும் தனித்துவமான புத்திசாலித்தனங்களை பார்க்கும்போது இயற்கையின் மீதான வியப்பு இன்னும் அதிகரித்து கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: