அதிக நேரம் சோசியல் மீடியாவில் மூழ்கும் நபர்களுக்கு பற்களை கடித்தல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரலாம் - ஆய்வில் தகவல்!

கோப்புப் படம்

இஸ்ரேலின் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கமியூனிட்டி மக்களால் பயன்படுத்தப்படும் இந்த கோஷர் தொலைபேசிகள் பெரும்பாலான செயலிகளை அகற்றியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவோர் தங்கள் பற்களை கடிப்பது மற்றும் தூக்கமின்மை பிரச்சனையால் போராடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவ் பல்கலைக்கழக (Tel Aviv University) ஆராய்ச்சியாளர்கள் சாதாரண ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் நபர்களின் நடத்தை குறித்து ஆய்வு செய்தனர். மற்றவர்கள் பெரும்பாலான ஆப்கள் இல்லாத கோஷர் தொலைபேசியை பயன்படுத்தினர்.

இஸ்ரேலின் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கமியூனிட்டி மக்களால் பயன்படுத்தப்படும் இந்த கோஷர் தொலைபேசிகள் பெரும்பாலான செயலிகளை அகற்றியுள்ளன. எனவே யூசர்கள் கடுமையான மத நடைமுறைகளை தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆய்வில், இரு வகை போன்களை பயன்படுத்தும் நபர்களின் தூக்கப் பழக்கத்தையும், அவர்களின் அன்றாட வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, வழக்கமான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்கள் பகலில் தங்கள் பற்களை கடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் கோஷர் தொலைபேசி யூசர்களில் ஆறு சதவீதம் பேர் மட்டுமே இந்த பழக்கத்தை கொண்டிருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதுதவிர சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மோசமான தூக்க அட்டவணைக்கு வழிவகுக்கிறது. வழக்கமான ஸ்மார்ட்போன் யூசர்களில் 20 சதவீதம் பேர் இரவில் எழுந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். அது ஏதேனும் காணாமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் பெசியா ஃபிரைட்மேன்-ரூபின் டைம்ஸ் ஆப் இஸ்ரேலுடன் பேசியதாவது, "ஏதேனும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் தொடர்ந்து தங்கள் தொலைபேசிகளை சரிபார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் பிற செயலிகளை எல்லா நேரங்களிலும் திறந்து பார்க்கிறார்கள். தொலைபேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஒருவர் தாடை வலியால் காயப்படுவதற்கும், பற்களை கடிப்பதற்கும், இரவில் எழுந்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு கூறுகிறது. செல்போன்களில் வளர்ந்து வரும் சார்பு சுழற்சி உருவாகிறது. இது கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது," என்று கூறினார்.

குயின்டெசென்ஸ் இன்டர்நேஷனல் (Quintessence International) இதழில் வெளியிடப்படவுள்ள இந்த ஆய்வில், வழக்கமான ஸ்மார்ட்போன் யூசர்களில் 45% பேர் தங்கள் சாதனங்களை குறைந்த அல்லது அதிகரித்த அளவு தவறாமல் சரிபார்க்க வேண்டிய ஒரு தேவையை உணர்ந்ததாகவும், ஆய்வுக்கு பங்கேற்றவர்களில் பாதி பேர் தங்கள் தொலைபேசி மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். அதுவே கோஷர் தொலைபேசியை உபயோகிக்கும் யூசர்களில் இந்த நிலை இல்லை என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... அமெரிக்காவில் உடை அவிழ்வதைக் கூட கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்!

அதாவது கோஷர் யூசர்களில் 22 சதவிகிதத்தினர் மட்டுமே தங்கள் சாதனங்களைத் தவறாமல் சரிபார்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். மேலும் 20 சதவிகிதத்தினர் போன்கள் தங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக உணர்ந்தனர். தொழில்நுட்பம் முக்கியமானதாக இருந்தாலும் ஸ்மார்ட்போனின் அதிகப்படியான பயன்பாடு எதிர்மறையான அறிகுறிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், அதனால் உடல் மற்றும் மனதில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் ஃபிரைட்மேன்-ரூபின் பரிந்துரைத்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: