ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் இரண்டு கால்களையும் இழந்த ராணுவ வீரர் வேல்ஸில் உள்ள மிக உயரமான மலையை ஏறி சாதனை படைத்துள்ளார்.
உத்வேகமான கதைகளை படிக்கும் போது நமக்குள்ளும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அல்லது காலத்தின் கோரதாண்டவத்தால் உடல் உறுப்பை இழந்தவர்களின் சாதனை பற்றிய கதைகள் எப்போதுமே இணையத்தில் வைரலாவது உண்டு. அப்படிப்பட்ட கதை ஒரு முன்னாள் ராணுவ வீரரின் கதை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாராசூட் படைப்பிரிவின் 2வது பட்டாலியனில் பணியாற்றிய லியாம் கிங், யுத்தகளத்தில் கண்ணி வெடியை மிதித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். 33 வயதான ராணுவ வீரரான அவர் திடீரென கால்களை பறிகொடுத்ததால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார். உடலில் ஏற்பட்ட காயங்களில் மட்டுமல்ல, மனதில் ஏற்பட்ட காயங்களில் இருந்தும் அவர் குணமடைய அதிக நாட்கள் பிடித்தது.
பல மாத மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு ப்ரோஸ்த்தெடிக் கால்கள் பொருத்தப்பட்டன. இந்த கால்களை கொண்டு அவரால் நடமாட, வாகனங்களை ஓட்ட முடியும் என்ற நிலை உருவானது. இதனால் யாருடைய சுய சார்பும் இன்றி மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார். இருப்பினும் தன்னால் எதையாவது சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டுமென லியாம் கிங் விரும்பினார்.
Read More : உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண் - யார் இவர்?
இதுகுறித்து லியாம்கிங் கூறுகையில், "சமீப காலம் வரை நான் எனது காயங்களுடன் மனதளவில் போராடினேன். நான் இப்போது வாழ்க்கைக்கான தேடலுடன் இருக்கிறேன்” ஏர்போர்ன் ஃபிட் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் இணைந்த லியாம் தனது செயற்கை கால்களுடன் எதையாவது சாதிக்கும் முயற்சியில் இறங்கினார். லியாம் போன்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கான உடற்பயிற்சி நிலையம் இது.
லியாம் மற்றும் ஏர்போர்ன் ஃபிட்டின் நிறுவனர் லூக் ரீட் ஆகிய இருவரும் இணைந்து ஒரு சாதனை பயணத்திற்கு திட்டமிட்டனர். இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில், "உச்சியில் கடும் மழை மற்றும் பனி, வேகமான மற்றும் சீற்றமான காற்று ஆகியவற்றை எதிர்கொண்டதாகக் கூறியது, ஆனால் அது எதுவும் லியாமை நிறுத்தவில்லை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம், இரண்டு கால்களையும் இழந்த லியாம், தனது செயற்கை கால்களுடன் கடல் மட்டத்திலிருந்து 3,560 அடி உயரத்தில் உள்ள வேல்ஸின் மிக உயரமான மலையை 12 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவருடன் பயணித்த லூக் கூறுகையில் "இது நான் பார்த்த மிகவும் நம்பமுடியாத சவால். லியாம் அதை முற்றிலும் அடித்தார்; நான் ஒருபோதும் இவ்வளவு உத்வேகம் பெற்றதில்லை” என்கிறார்.
குளிர், மழை, பனி என மலையேற்றத்தில் இருந்த அனைத்து சவால்களையும் கடந்து, சாப்பிடக்கூட சரியான இடமில்லாத சரிவான மலைப்பகுதியை செயற்கை கால்களுடன் லியாம் ஏறியது பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதுதொடர்பான பதிவுகளும், புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.