முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / என் உயிரை காப்பாற்றிய அந்த மனிதர் யார்? நெகிழ்வான கதையை பகிர்ந்த கூகுள் முன்னாள் எம்டி

என் உயிரை காப்பாற்றிய அந்த மனிதர் யார்? நெகிழ்வான கதையை பகிர்ந்த கூகுள் முன்னாள் எம்டி

கூகுள் நிர்வாகி பர்மிந்தர் சிங்

கூகுள் நிர்வாகி பர்மிந்தர் சிங்

வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை சமூக ஊடகத்தில் கூகுளின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்தார். அவரை தொடர்ந்து பலரும் அப்படிப்பட்ட சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்பின் தெரியாத நபர் ஒருவர்  நீங்கள் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் போது அல்லது ஆபத்தில் இருக்கும் போது உங்களுக்கு உதவ முன்வந்தால் அது பல ஆண்டுகள் கடந்தாலும், அந்த செயல் உங்கள் நினைவை விட்டு நீங்காது. காலத்திற்கும் மனதிலேயே இருக்கும். அந்த மாதிரியான சம்பவத்தை கூகுளின் முன்னாள் நிர்வாக இயக்குனரான பர்மிந்தர் சிங் பகிர்ந்துள்ளார்.

கூகுளின் முன்னாள் நிர்வாக இயக்குனரான பர்மிந்தர் சிங் சமீபத்தில் ட்விட்டரில் மனதைக் கவரும் 2 சம்பவங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்தார். முன்னாள் கூகுள் நிர்வாகி பர்மிந்தர் சிங்கின் சமீபத்திய ட்விட்டர் போஸ்ட் அவர் சிறுவனாக இருந்த போது ஒரு வெளிநபர் தனது உயிரை காப்பாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார் . மேலும் பல ட்விட்டர் யூஸர்கள் இதே போல அன்பான அந்நியர்களுடன் தங்களுக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது.

பர்மிந்தர் சிங் ஷேர் செய்துள்ள ட்விட் ஒன்றில், "நான் சிறுவனாக இருந்தபோது ரிவர்ஸில் வந்த அம்பாசிடர் கார் என் மீது மோதி நசுக்கி விடாமல், அருகில் இருந்த முன்பின் தெரியாத ஒரு வெளிநபர் என்னை அவர் கையில் தூக்கி காப்பாற்றினார். ஆனால் அவரை பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் அவர் ஒரு சில்வர் HMT வாட்ச் அணிந்திருந்தார் என்பது மட்டும் தான்" என்று குறிப்பிட்டு உள்ளார். முற்றிலும் முன்பின் தெரியாத ஒரு அந்நியர் உங்களுக்காக செய்த நல்ல காரியம் என்ன.? என்று நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதே போல பாலி ஏர்போர்ட்டில் அந்நியர் ஒருவர் அவருக்கு உதவிய மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்றையும் பர்மிந்தர் சிங் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டார். பாலி ஏர்போர்ட்டில் உள்ளூர் கரன்சியான இந்தோனேசிய ரூபாயில் தான் departure tax-ஐ செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் கையில் வரி செலுத்த தேவையான உள்ளூர் கரன்சியை நான் கொண்டு செல்லவில்லை.

இதனை தொடர்ந்து க்யூவில் எனக்கு பின் நின்று கொண்டிருந்த பெண் எனக்கு தேவையான பணம் கொடுத்து உதவி செய்தார். அவரிடம் என் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏதாவது வாங்கி கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் மறுத்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பர்மிந்தர் சிங்கிற்கு உதவியவர் பெண் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர் ஆவார். இதனை குறிப்பிட்டு அந்த சந்தர்ப்பத்தில் மைக்ரோசாப்ட் கூகுளுக்கு உதவியது என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல நெட்டிசன்கள் தங்களுக்கு அந்நியர்கள் உதவி செய்த பல அனுபவங்களை ஷேர் செய்து கொண்டனர்.

First published:

Tags: Google, Twitter, Viral News