தனது தங்கைக்கு சூப்பராக சப்ரைஸ் கொடுத்து அசத்திய சகோதரர் - நெகிழ்ச்சி சம்பவம்!

தனது தங்கைக்கு சூப்பராக சப்ரைஸ் கொடுத்து அசத்திய சகோதரர் - நெகிழ்ச்சி சம்பவம்!

தங்கைக்கு சூப்பராக சப்ரைஸ் கொடுத்து அசத்திய சகோதரர்

சகோதர பாசத்தை  கதையம்சமாக கொண்டு பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான கரன் அர்ஜூன் படத்தை மேற்கோள்காட்டி அண்ணன், தங்கையை நெட்டிசன்கள் புகழ்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பழுதடைந்த லேப்டாப்பிற்கு பதிலாக, 2 மாதங்களாக பணம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை தங்கைக்கு சர்ப்ரைஸாக வாங்கிக் கொடுத்து அண்ணன் அசத்தியுள்ளார்.

வீட்டில்  இருக்கும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி இடையே பெரும்பாலும் சண்டையும் சச்சரவுமாக இருப்பதை மட்டுமே பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம். இது பெற்றோருக்கும் மிகப்பெரிய தலைவலியாகவும் இருக்கும். எப்போது பார்த்தாலும் சண்டையிட்டு கொண்டே இருக்கிறார்கள் என்று சில பெற்றோர்கள் சகோதர, சகோதிரிகளில் ஒருவரை ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைப்பதும் உண்டு. சில இடங்களில் வேடிக்கையாக Prank செய்து விளையாடுவார்கள். ஆனால், சில இடங்களில் அண்ணன், தங்கை உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம் நம்மை நெகிழச் செய்துவிடும். 

இப்படியான பாசக்கார அண்ணனின் செயல், நெட்டிசன்களின் ஏகோபித்த கவனத்தை பெற்றுள்ளது. அஜய் என்ற இளைஞர் சிவில் எஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தங்கை ஒருவர் உள்ளார். அந்த தங்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த லேப்டாப் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், ஆங்காங்கே சில இடங்களில் ஒட்டுபோட்டு பயன்படுத்தி வந்துள்ளார். இதனை கவனித்த அண்ணன் அஜய், தங்கைக்கு தெரியாமல் 2 மாதங்களுக்கு மேலாக பணம் சேர்த்து புதிய லேப்டாப் ஒன்றை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார். நீங்கள் நினைக்கிற மாதிரி ஏதோ சாதாரண லேப்டாப் எல்லாம் கிடையாது. 1,22, 900 ரூபாய் மதிப்புள்ள MacBook Pro லேப்டாப்பை தங்கைக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.இதுமட்டுமல்லாது, தங்கையின் பழைய லேப்டாப் புகைப்படங்களையும், புதிதாக வாங்கிக்கொடுத்த லேப்டாப் புகைப்படங்களையும் அவர் தனது இணைய பக்கத்தில் கடந்த ஜனவரி 4ம் தேதி  பதிவேற்றம் செய்துள்ளார். நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இந்த போஸ்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததுடன், அண்ணன் அஜயை பாரட்டி வருகின்றனர். இதுவரை அந்த போஸ்ட் 9 ஆயிரம் லைக்குகளை கடந்துள்ளது. கமெண்ட் பிரிவில், தெய்வமே! நீங்க எங்க அண்ணா பிறந்திருக்க கூடாதா? என சில தங்கைகள் ஏக்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்த போஸ்டை தங்களின் அண்ணன்களுக்கு Tag செய்துள்ளனர்.Also read... Term Insurance வாங்குவது தொடர்பான கட்டுக்கதைகள் இவைகள் தான்!

மேலும் சில நெட்டிசன்கள்,  சகோதர பாசத்தை  கதையம்சமாக கொண்டு பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான கரன் அர்ஜூன் படத்தை மேற்கோள்காட்டி அண்ணன், தங்கையை நெட்டிசன்கள் புகழ்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாருக்கானும், சல்மான்கானும் நடித்திருந்தனர். இதனிடையே, சில தங்கைகள்  அஜயின் பாசம் மற்ற அண்ணன்களுக்கு தலைவலியாகியுள்ளது. ஒரு நெட்டிசன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த லேப்டாப்பை வாங்கிக்கொடுக்க நான் ஒரு வருடம் சாப்பிடாமல் வேலை பார்த்து பணத்தை சேமித்தால் மட்டுமே இந்த லேப்டாப்பை என் தங்கைக்கு வாங்கிக்கொடுக்க முடியும் என மகிழ்ச்சியாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: