• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • WWE Rock: 'ஆண்களுக்கு மகள்கள் தான் தேவை' - டுவைன் ஜான்சன் சொல்லும் முக்கிய காரணம்!

WWE Rock: 'ஆண்களுக்கு மகள்கள் தான் தேவை' - டுவைன் ஜான்சன் சொல்லும் முக்கிய காரணம்!

டுவைன் ஜான்சன்

டுவைன் ஜான்சன்

யாராவது தன்னிடம் இந்த கொரோனா தாக்கத்துக்கு முன் வாழ்க்கையில் மிக முக்கியானது எது என்று கேட்டிருந்தால் குடும்பம் தனது மனைவி மற்றும் குழந்தைகள் என்று கூறியிருப்பேன் என்கிறார்.

  • Share this:
உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் டுவைன் ஜான்சன். என்ன தான் இருந்தாலும் நமக்கு அவர் எப்பொழுதும் 'தி ராக்' தான். அந்த அளவுக்கு WWE மூலம் மக்களின் மனங்களை கவர்ந்தவர்.

இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு அப்பாக தனது மகள்கள் குறித்து எமோஷனாலான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். கொரோனா எனும் பெருந்தொற்று காலத்தில் தனது குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக தெரிவிக்கும் அவர், அப்பா, மகள் உறவு போல இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்கிறார்.

முக்கியமாக இந்த கடினமான காலத்தில், குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்று தான் கற்றுக்கொண்டுள்ளதாக கூறுகிறார். அதாவது குழந்தைகளுக்கு நாம் தேவைப்படுகிற நேரத்தில் அவர்களுக்காக இருப்பது குழந்தைகள் வளர்ப்பில் முக்கியமானது என்றார். அவர்களின் கருத்துக்களை காதுகொடுத்துக் கேட்பது மற்றும் அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்வது மிகவும் முக்கியமானது என்றும், அவர்களுடன் இணைந்து அவர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பது முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் யாராவது தன்னிடம் இந்த கொரோனா தாக்கத்துக்கு முன் வாழ்க்கையில் மிக முக்கியானது எது என்று கேட்டிருந்தால் குடும்பம் தனது மனைவி மற்றும் குழந்தைகள் என்று கூறியிருப்பேன் என்கிறார். இந்த வார்த்தைகள் அவரது இதயத்தில்இருந்து வரும் வார்த்தை எனும் அவர், இந்த கொரோனா எனும் பெருந்தொற்று காலத்தில் குடும்பத்தினர் ஏன் முக்கியமானவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்ததாக கூறுகிறார். இந்த வீடியோவுக்கான பதிவில், 'எல்லோரும் ஆண் குழந்தைகளை தான் விரும்புவர். ஆனால் உண்மையில் அவர்களுக்கு பெண் குழந்தைகள் தான் தேவை என்று பதிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உலெகங்கிலும் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் தனது தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 49 வயதாகும் டுவைன் ஜான்சனிற்கு ஜாஸ்மின், தியா, சைமோன் என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அவருக்கு லாரன் ஹாஸியன் என்ற 36 வயதான மனைவி உள்ளார். இந்த வீடியோவில் உள்ள சைமோன் என்ற மகள் அவருக்கும் அவரது முதல் மனைவி டேனி கார்சியாவிற்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... 95 வயதில் படு சுறுசுறுப்பாக பர்ஃபி விற்று தொழிலதிபரான பாட்டி - இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி!

ரெஸ்ட்லிங்கை தாண்டி, அவர் 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்', 'தி ஸ்கார்பியன் கிங்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6', 'ஜூமான்ஜி - தி நெக்ஸ்ட் லெவல்' போன்ற படங்களின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர். தற்போது அவர் நடித்துவரும் படமான 'பிளாக் ஆடம்' என்ற படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதன்மையானவராக இருக்கிறார் டுவைன் ஜான்சன். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 247 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தையர் தினம் குறித்த அவரது வீடியோ மிகுந்த வைரலாகி வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: