ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இப்படி ஒரு கம்பெனியா? 52 மாதச் சம்பளத்தை போனஸாக வழங்கிய நிறுவனம்.. அசந்துபோன ஊழியர்கள்!

இப்படி ஒரு கம்பெனியா? 52 மாதச் சம்பளத்தை போனஸாக வழங்கிய நிறுவனம்.. அசந்துபோன ஊழியர்கள்!

எவர்கிரீன் மெரைன் நிறுவனம்

எவர்கிரீன் மெரைன் நிறுவனம்

இந்த போனஸ் அறிவித்ததன் மூலம், இந்நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்த ஊழியர் நான்காண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக பெறுவார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaTaiwanTaiwan

தைவான் நாட்டைச் சேர்ந்த Evergreen Marine நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாதச் சம்பளத்தை ஊதியமாக வழங்கி அள்ளி கொடுத்திருப்பது உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களை வியப்படைய வைத்துள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான Evergreen Marine, அதன் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி போனஸை அறிவித்துள்ளது. 2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் Evergreen Marine நிறுவனத்தின் லாபம் மட்டும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் என கருதப்படுகிறது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு 10 முதல் 45 மாதம் வரையிலான சம்பளத் தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாக வேலை செய்த ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 52 மாதம் வரையிலான சம்பளத்தை போனஸாக அள்ளி கொடுத்துள்ளது Evergreen Marine நிறுவனம். இதன்மூலம், இந்நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்த ஊழியர் நான்காண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக பெறுவார். ஜூனியர் லெவல் ஊழியருக்கான அடிப்படை சம்பளம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில், அவர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தால் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை போனாஸாக கிடைக்கும்.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு உலகளாவிய கப்பல் சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்ததால் இந்நிறுவனம் அதிக லாபத்தை ஈட்ட காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


First published:

Tags: Taiwan