முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கண்ணை கவரும் வானவில் நிற பாம்பு - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ!

கண்ணை கவரும் வானவில் நிற பாம்பு - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ!

வானவில் நிற பாம்பு

வானவில் நிற பாம்பு

பாம்பு என்றால் படையே நடுங்கும், ஆனால் சில நேரங்களில் ஒரு சில பாம்புகள் ரசிக்கும் வகையில் உள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜெய் ப்ரூவர், ரெட்டிகுலேட்டட் பைத்தானின் ஒரு நம்பமுடியாத வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதன் நிறம் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு வித்தியாசமாக உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும், ஆனால் சில நேரங்களில் ஒரு சில பாம்புகள் ரசிக்கும் வகையில் உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்., அழகான வானவில் கலரில் ஒரு பாம்பு உள்ளது.

அந்த வியக்கத்தக்க பாம்பின் வீடியோவை தான் ஜெய் ப்ரூவர் என்பவர் ஷேர் செய்துள்ளார். அதில் அந்த பாம்பின் பெயர் "மை லவ்" என கூறும் அவர், பாம்பை கையில் பிடித்து விளையாடுவதை காண முடியும். மேலும் இந்த பாம்பின் வானவில் நிறத்தை பாருங்கள் இது மிகவும் அழகாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ALSO READ |  எலும்புக்கூட்டுடன் கண்டறியப்பட்ட மர்மமான திரவத்துடன் நீல நிற பாட்டில் – இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வு அதிர்ச்சி

இந்த வீடியோவை ஜெய் ப்ரூவர் கடந்த மே மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்த நிலையில் இந்த வீடியோ வைரலானது. வீடியோவில் அந்த பாம்பு முதலில் நீல நிறத்தில் உள்ளது, ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது வானவில் நிறங்களில் ஒளிர்கிறது.




 




View this post on Instagram





 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)



பாம்பின் தோல் மீது சூரிய ஒளி படும்போது அதன் நிறங்கள் மேலும் அழகாக காட்சியளிக்கிறது. ஜெய் ப்ரூவர் இதுபோன்ற நம்பமுடியாத வீடியோக்கள் பலவற்றை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். தற்போது வரை சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியாவை பார்வையிட்டுள்ளனர்.

மேலும் 998k லைக்குகளையும் பெற்றுள்ளது. 8000க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். பாம்பின் நம்பமுடியாத நிறத்தைப் பற்றி நெட்டிசன்கள் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ |  விலைமதிப்பில்லாத கொம்புகளுக்காக தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்கள்

"இதுவரை நாம் பாத்திராத அழகான பாம்பு" என்று ஒரு யூசர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அற்புதமாக இருப்பதாக மற்றொரு யூசரும் , நான் சத்தியம் செய்கிறேன், நான் எப்போதாவது அங்கு வந்தால் அந்த பாம்பை நேரில் வந்து பார்க்காமல் செல்ல மாட்டேன் என ஒருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்வன மிருகக்காட்சிசாலையில் உள்ள பாம்புகளில் இந்த பாம்பு மிகவும் அழகாக இருப்பதால் இதற்கு மை லவ் என பெரியரிட்டதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 50 ஆண்டுகளில் முதல் முறையாக வானவில் பாம்பு அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகையான பாம்பு கடைசியாக 1969-ல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: News On Instagram, Python