• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்டட் வீடு - ரூ.71,000-க்கு வாடகைக்கு எடுத்துள்ள டச்சு தம்பதி!

ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்டட் வீடு - ரூ.71,000-க்கு வாடகைக்கு எடுத்துள்ள டச்சு தம்பதி!

ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்டட் வீடு

ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்டட் வீடு

சாம்பல் நிறத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு ஒரு பெரிய கற்பாறை வடிவத்தை ஒத்திருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐரோப்பாவின் முதல் 3டி பிரிண்டட் வீட்டை ஒரு டச்சு தம்பதி வாடகைக்கு எடுத்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த 70 வயதான எலிஸ் லூட்ஸ் மற்றும் 67 வயதான ஹாரி டெக்கர்ஸ் ஆகியோர் ஐரோப்பாவின் முதல் முழு 3-டி பிரிண்டட் செய்யப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த முழு 3டி பிரிண்டட் வீடு வெறும் 5 நாட்களில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சாம்பல் நிறத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு ஒரு பெரிய கற்பாறை வடிவத்தை ஒத்திருக்கிறது.

ஏனெனில் அந்த வீட்டில் அச்சிடப்பட்ட அடுக்குகளில் சில தவறுகள் தெரிகிறது. அநேகமாக பிரிண்டர் சில இடங்களில் தவறாக வேலை செய்திருக்க வேண்டும். எனினும் 5 நாட்களில் கட்டப்பட்டுள்ள முழுவதும் 3டி பிரிண்ட் செய்யப்பட்ட வீடு என்பதால் இந்த வீட்டிற்கு மவுசு சற்றே அதிகம் காணப்படுகிறது. இந்த வீடு 3 டி-பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் சட்டப்பூர்வமாக வாழக்கூடிய கட்டிடமாகும். நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவனில் உள்ள 94 சதுர மீட்டர் அளவுடைய இந்த டபுள் பெட்ரூம் கொண்ட இந்த வீட்டை எலிஸ் லூட்ஸ் - ஹாரி டெக்கர்ஸ் தம்பதி சுமார் £700-க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.

அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.71,000. சுமார் 6 மாதங்களுக்கு இந்த வீட்டை லூட்ஸ் - டெக்கர்ஸ் தம்பதி வாடகைக்கு எடுத்துள்ளது. இவர்கள் சமீபத்தில் தங்கள் தனித்துவமான கற்பாறை வடிவ 3-டி பிரிண்டட் வீட்டிற்கு டிஜிட்டல் சாவியை பெற்றனர். சாவியை இருக்கும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த வீட்டின் முன்பக்க கதை திறந்து கொள்ள முடியும். ஐன்ட்ஹோவனில் அமைந்துள்ள இந்த வீடு 'Project Milestone'-ன் ஐந்தில் முதல் வீடு ஆகும். மேலும் இது ஐன்ட்ஹோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வான் விஜ்னென், செயிண்ட்-கோபேன் வெபர் பீமிக்ஸ், வெஸ்டெடா, ஐன்ட்ஹோவன் நகராட்சி மற்றும் விட்டீவீன் + பாஸ் (Witteveen+Bos.) ஆகியவற்றின் கூட்டு கட்டுமான மற்றும் கண்டுபிடிப்பு திட்டம்.

இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளது பற்றி தகவலை பகிர்ந்து கொண்டுள்ள டெக்கர்ஸ், நாங்கள் எப்போதும் வாழ சிறப்பான இடங்களை தேடுகிறோம். இது ஒரு சிறப்பு வாழ்க்கை முறையை எங்களுக்கு நினைவூட்டுகிறது. இது அசாதாரணமான ஒரு வடிவம். நாங்கள் இதை முதன் முதலில் பார்த்தபோது, இளமையாக இருந்த போது தெரிந்த ஒன்றை நினைவூட்டியது, இது அழகாக இருக்கிறது" என்றார். மேலும் பேசியுள்ள அவர், இந்த வீடுஒரு பதுங்கு குழியின் உணர்வை தருகிறது. எனவே இந்த வீட்டை நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்றார்.

Also read... அண்டார்டிக்காவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கட்டுமான நிறுவனமான வெபர் பெனலக்ஸின் தலைமை நிர்வாகி பாஸ் ஹுய்ஸ்மன்ஸ் கூறுகையில், இது உள்ளூர் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட முதல் வாடகைக்கு விடப்பட்ட வீடு என்று கூறுகிறார். பிரிண்டட் வீட்டிற்கு இடைவெளி அல்லது ரெஸ்ட் தேவையில்லை என்பதால், இதை உருவாக்க 120 மணி நேரம் மட்டுமே ஆனது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டுவசதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அதன் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு நூறாயிரக்கணக்கான வீடுகளை உருவாக்க நெதர்லாந்து தயாராகி வருவதால், இதுபோன்ற வீடுகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐன்ட்ஹோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், 3 டி பிரிண்டிங்கை இன்னும் நிலையான நிலைகளாக மாற்றுவதற்கும் பணிபுரியும் தியோ சாலெட்டின் கூற்றுப்படி, 30 சென்ட்டிற்கு குறைவான பொருளைப் பயன்படுத்தி வீடுகளை அச்சிட முடியும். இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கான்கிரீட், பற்பசையின் நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதாக சாலட் விவரிக்கிறார்.எனவே இது வலிமிகுந்ததாக இருக்கும். பாரம்பரிய வீடுகளுடன் ஒப்பிடும் போது கட்டுவதற்கு குறைந்த நேரமும், குறைந்த அளவிலான கான்கிரீட் மட்டுமே தேவைப்படுவதால், நெதர்லாந்தின் வீட்டு வசதி பற்றாக்குறையை தீர்க்க இதுபோன்ற வீடுகள் முக்கியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: