Home /News /trend /

எஸ்கேப் ஆன எலான் மஸ்க் - இந்தியா, அமெரிக்கா, துருக்கி, ஐரோப்பாவில் ட்விட்டருக்கு நெருக்கடி

எஸ்கேப் ஆன எலான் மஸ்க் - இந்தியா, அமெரிக்கா, துருக்கி, ஐரோப்பாவில் ட்விட்டருக்கு நெருக்கடி

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ட்விட்டரின் உரிமைக்கான போராட்டம் அமெரிக்காவில் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது, ஆனால் ட்விட்டர் vs எலோன் மஸ்க் சிக்கலுக்கு மத்தியில் இந்த மைக்ரோ பிளாக்கிங் தளம் தொடர்ந்து சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்கிறது.

  அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் மஸ்க்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த ட்விட்டர், எலான் மஸ்க் தளத்தை வாங்க ஒப்புக்கொண்ட பிறகு "நிறுவனத்தை குப்பையில் போடவும், அதன் செயல்பாடுகளை சீர்குலைக்கவும், பங்குதாரர் மதிப்பை அழிக்கவும், வெளியேறவும்" முயன்றார் என தெரிவித்துள்ளது. ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகள் தொடர்பான போதுமான தகவல்களை தமக்கு வழங்காததால், ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தனக்கு உரிமை உள்ளது என்று மஸ்க் வாதிட்டார், அதே நேரத்தில் (ஒரு பங்குக்கு $54.20) ஒப்புக்கொண்ட விலையில் ட்விட்டரை வாங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என ட்விட்டர் விரும்புகிறது.

  உரிமைக்கான இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், திங்கர்பிளேஸின்( ThinkerPlace) இயக்குனர் தீப்தி ஷர்மா நியூஸ் 18 -க்கு அளித்த பேட்டியில், “ட்விட்டர் எப்போதுமே உலகெங்கிலும் உள்ள பல்வேறு தலைப்புகள், சிக்கல்கள் மற்றும் போக்குகளில் கருத்துச் சுதந்திரத்தை எளிதாக்கும் ஒரு திறந்த தளமாக இருந்து வருகிறது. ட்விட்டரின் உரிமை பற்றி விவாதிக்கப்பட்டாலும், முதன்மையான ‘கருத்து பகிர்வு’ தளமாக ட்விட்டரின் மதிப்பு, மாறக்கூடாது என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

  இதற்கிடையில், id8 மீடியா சொல்யூஷன்ஸின் CEO மற்றும் இணை நிறுவனர் தன்யா ஸ்வெட்டா (Tanya Swetta " சமூக ஊடக தளத்தின் நிதி நிலைமையில் தலைமை மாற்றத்தன் விளைவுகள் தெரியவில்லை என்றாலும், விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கீழ்நோக்கிய வரைபடத்தைக் கண்டுள்ளது. ட்விட்டர் அதன் புதிய முகத்தை இனிமேல்தான் உருவாக்க வேண்டும்"

  ALSO READ | ஜூலை 22: தித்திக்கும் தேசிய மாம்பழ தினம் இன்று.! - மாம்பழத்தின் வரலாறு தெரியுமா?
   ஆனால் உலகின் முதல் பணக்காரருடனான இந்த வழக்கு மட்டுமே ட்விட்டர் சந்திக்கும் ஒரே பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பாவிலும், ட்விட்டர் நிறுவனம் உண்மையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

   

  ட்விட்டர் VS இந்திய அரசு

  இந்த மாத தொடக்கத்தில், ட்வீட் மற்றும் கணக்குகளில் உள்ள சில தடை உத்தரவுகளை எதிர்த்து இந்திய அரசாங்கத்திற்கு எதிராக பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் வழக்கு தொடர்ந்தது. உரிய காரணமின்றி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல ட்வீட்களை அகற்றுமாறு ட்விட்டருக்கு உத்தரவிட்டதன் மூலம் இந்திய அதிகார மையம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

  தங்கள் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால், ட்விட்டரின் மூத்த இணக்க அதிகாரிக்கு(senior compliance officer) எதிராக இந்தியாவில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்போவதாக மத்திய அரசு அச்சுறுத்தியதாகவும் ட்விட்டர் கூறியது.

  ALSO READ | மெட்ரோ ரயிலுக்குள் ‘ரீல்ஸ்’ ஷீட்.. சிக்கலில் சிக்கிய இளம்பெண்..

  நிறுவனத்திற்கும் அரசின் பிரதிநிதிகளான அதிகாரிகளுக்கும் இடையிலான இந்த கசப்பான உறவு புதிதான ஒன்றல்ல, ஏனெனில் ட்விட்டர் இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகள் தன்னிச்சையான தளமாகவே இயங்கியது. பின்னர், அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இணங்கியது.

  இங்கே, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 முக்கிய பங்கு வகிப்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில், ஐடி விதிகளுக்கு இணங்க "கடைசி வாய்ப்பு" என்று கூறி, மத்திய அரசு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு மற்றொரு எச்சரிக்கையை வழங்கியது.

  ஜூலை 4 ஆம் தேதிக்குள் சில தேவைகளைப் பின்பற்றாவிட்டால், சமூக ஊடகத் தளம் அதன் இடைத்தரகர் அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் அரசாங்கம் எச்சரித்தது.

  "ஐடி சட்டத்தின் 69 A பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றும் அறிவிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது" மற்றும் "உள்ளடக்கத்தை அகற்ற இணங்க மாட்டோம் என நோட்டீஸ் பிறப்பித்தது" ஆகியவையே மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நடவடிக்கையில் இறங்க காரணம் என கூறப்படுகிறது.

  ALSO READ | இதென்னடா பீட்சாவுக்கு வந்த கொடுமை... உணவுப்பிரியர்களை மிரளவைத்த வீடியோ.!
   அரசாங்கத்திற்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையிலான பகை குறித்து, பேராசிரியர் SPJIMR தலைவர் வினிதா திவேதி, கூறுகையில்,“ட்விட்டர் சுதந்திரமான பேச்சுக்கான இடமாகும், ஆனால் இது தவறான தகவல்களை, அதிருப்தி மற்றும் விமர்சனங்களை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். இது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையாகவும் அக்கறையுடனும் உள்ளது” என்றார்.+


  "கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது ட்விட்டர் நிறுவனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் நுபுர் ஷர்மா விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. எவ்வாறாயினும், வேறு எந்த சமூக ஊடக தளத்தையும் விட இந்தியாவில் இந்த ஊடகத்தின் தாக்கம் மிகக் குறைவு, மேலும் அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு அழைக்கும் போது, ​​​​இந்த விஷயம் பேச்சு சுதந்திரத்தைப் பற்றியதாகத் தோன்றுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான திருப்பம் மற்றும் இணைய தணிக்கையில் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்று அவர் மேலும் கூறினார்.

  இருப்பினும், மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் சட்ட அறிவிப்புகளை ஏன் குறைவாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்றும் சமூக ஊடக நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.

  இதற்கு முன்னதாக ட்விட்டர் அதன் மாதாந்திர இணக்க அறிக்கையை வெளியிட்டது, அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 26 முதல் மே 25 வரை அதன் விதிகளை மீறியதற்காக இந்திய பயனர்களின் 46,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை இடைநீக்கம் செய்தது.

  இதற்கிடையில், மற்ற நாடுகளில் அதிகாரிகளிடமிருந்து வந்த உள்ளடக்க நீக்குதல் அறிவிப்புகளுக்கு ட்விட்டர் முழுமையாக இணங்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ட்விட்டரின் உலகளாவிய வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 2021ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சட்டக் கோரிக்கைகளுக்கான ஒட்டுமொத்த இணக்க சதவீதம் முறையே 11%, 13% மற்றும் 7% ஆக இருந்தது.

  பிற நாடுகளில் உள்ள சிக்கல்கள்

  ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம், சட்டத்திற்குப் புறம்பாக அல்லது அவனதிக்கும் உள்ளடக்கத்தை (damaging content) அகற்றுவதற்கான தொழில்நுட்ப தளங்களுக்கு புதிய தேவைகளை நிறுவுகிறது, இது விரைவாக நடைமுறைக்கு வரும்.

  எனவே, இலக்கு விளம்பரம்(targeted advertising) மற்றும் வெளிப்படைத்தன்மை தேவைகளில் புதிய தடைகள் இருப்பதால், ட்விட்டர் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி மிகவும் வெளிப்படையானதாக இருக்கும்படி, ஐரோப்பிய ஒன்றிய சட்டம் ட்விட்டரை வலியுறுத்தலாம். மேலும், சர்வதேச தளங்களுடன் சேர்ந்து ஐரோப்பாவில் ட்விட்டரின் செயல்பாடுகளை மறுசீரமைக்க மற்ற கட்டாயப்படுத்தலாம்.

  இதேபோல், இங்கிலாந்தில், இப்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் ஆன்லைன் பாதுகாப்பு மசோதா, ட்விட்டரில் புதிய தேவைகளை விதிக்கும். இது ஒரு சிக்கலான மற்றும் விரிவாக்கப்பட்ட சட்டமாகும், இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆன்லைன் இடங்களை (online space) உருவாக்குவது, சுதந்திரமான வெளிப்பாட்டைப் பாதுகாப்பது மற்றும் தொழில்நுட்ப வணிகங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் புதுமைகளை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  மஸ்க் vs ட்விட்டர் பஞ்சாயத்தை தவிர, பயனர்களின் தனிப்பட்ட தரவை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து பயன்ர்களை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டி ட்விட்டர் நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது, இதையடுத்து, 150 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ட்விட்டர் ஒப்புக்கொண்டது.

  இந்த வழக்கின்படி, ட்விட்டர் பல ஆண்டுகளாக அதன் பயனர்களை எச்சரிக்கத் தவறியதன் மூலம், அவர்களின் தொடர்புத் தகவலைப்(contacts) பயன்படுத்தி குறிப்பிட்ட சில விளம்பரங்களை சந்தைப்படுத்துபவர்களுக்கு உதவியது, இது 2011 ஆம் ஆண்டு ஃபெடரல் டிரேட் கமிஷனுடனான தனியுரிமை ஒப்பந்தத்தை மீறுகிறது.

  இப்போது, ​​ட்விட்டர் மற்றும் FTC( FEDERAL TRADE COMMISSION) க்கு இடையேயான புதிய முன்மொழியப்பட்ட தீர்வு, குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கு உதவுவதுடன், "ஏமாற்றும் வகையில் சேகரிக்கப்பட்ட தரவு"-களின் மூலம் லாபம் ஈட்டுவதைத் தடுக்கிறது. இது தொலைபேசி எண்களைத் தவிர பல காரணி அங்கீகார பயன்பாடுகள் (multi-factor authentication) போன்ற வேறு பயனர் அங்கீகார முறைகளை அனுமதிக்கிறது. விளம்பர நோக்கங்களுக்காக தொடர்புத் தகவலைப் பயன்படுத்தும் அதன் நடைமுறையை வெளியிட ட்விட்டர் தவறியதாகவும் கூறப்படுகிறது.

  இதனிடையே வேறு சில சிக்கல்களும் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தபோது நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 65% “பழமைவாதிகள்”(தங்களை பழமைவாதிகள் என அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்) ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் பழமைவாதிகளையும் பழமைவாத கருத்துக்களை வேண்டுமென்றே தணிக்கை செய்வதாக நம்பினர்.

  எனவே ஜனவரி 6 அன்று வெள்ளை மாளிகை மீதான தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டபோது, அமெரிக்கர்களிடையே, ட்விட்டர் நிறுவனம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது அதிர்ச்சியான ஒன்றல்ல.

  தனித்தனியாக, ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள், உக்ரைன் படையெடுப்பைச் நியாயப்படுத்தும் ரஷ்ய பிரச்சார நடவடிக்கைகளைத் தொடரத் தவறிவிட்டதாக சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் 70% க்கும் அதிகமான உக்ரேனிய வெறுப்புப் பேச்சு பதிவுகள் இன்னும் உள்ளதாகவும், மேலும் அத்தகைய பதிவுகளுக்கு பொறுப்பான கணக்குகளில் 90% க்கும் அதிகமானவை இன்னும் செயலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  ALSO READ | பயணிகளிடம் ‘அழகுக் கட்டணம்’ வசூல் செய்ததா இண்டிகோ விமான நிறுவனம்.?

  மற்ற சமூக ஊடக தளங்களைப் போலவே, ட்விட்டரும் பயனர்கள் ரஷ்யாவின் படையெடுப்பைப் புகழ்வதையோ அல்லது உக்ரேனியர்களை அவர்களின் தேசிய அடையாளத்தின் அடிப்படையில் தாக்குவதையோ தடைசெய்யும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் ஒரு கணக்கை இடைநிறுத்துவதற்கு பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட மீறல்கள்(violations) தேவை என்பதை நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

  இது போன்ற மீறல்கள் குறித்து தங்கள் கவனத்திற்கு வந்த பிறகு யூடியூப் உடன் இணைந்து, ட்விட்டரும் பல கணக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

  ரஷ்யாவைப் பொறுத்தவரை, ட்விட்டரின் அணுகலைத்(access) தடுப்பதன் மூலம் போர் பற்றிய தகவல்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால் நிறுவனம் கண்காணிப்பு மற்றும் தணிக்கையைத் தவிர்க்க புதிய தனியுரிமை-பாதுகாக்கப்பட்ட தளத்தை(privacy-protected site) அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

  இருப்பினும், கடுமையான சட்டங்களின் விளைவாக, ட்விட்டர் மற்ற நாடுகளில் கூடுதல் தடைகளை எதிர்கொள்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஜப்பானில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களின் தலைமையகத்தைப் பதிவு செய்யத் தவறியதற்காக அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, துருக்கியில் கடந்த ஆண்டு, புதிய சமூக ஊடகச் சட்டத்தின் கீழ் ட்விட்டரில் விளம்பரத் தடைகளை அதிகாரிகள் விதித்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Elon Musk, Twitter

  அடுத்த செய்தி